சாலை நடுவே குட்டியை ஈன்ற யானை - பிரசவத்திற்காகக் காத்திருந்த வாகன ஓட்டிகள் | Video

சுமார் 1 மணி நேரமாக யானையின் சத்தம் மட்டுமே சாலையின் நடுவே கேட்க, அவ்வளவு நேரமும் வாகனங்கள் வரிசையாக யானைக்காகக் காத்துக்கொண்டு இருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Elephant
ElephantTwitter
Published on

கருவுற்ற யானை ஒன்று ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சாலையில் குட்டியை ஈன்றுள்ள நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் அருகே உள்ள சாலையில் கருவுற்ற யானை ஒன்று பிரசவ வலியால் பிளிறியுள்ளது.

Elephant
ElephantNewsSense

அதனைக் கண்ட வாகன ஓட்டிகள் தொலை தூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு அமைதி காத்துள்ளனர்.

யானையின் நடவடிக்கைகளைக் கவனித்து வந்துள்ளனர். அந்த யானையும் ஒரு மணி நேரமாகப் பிரசவ வலியில் தவித்தது, பின்னர் சாலைக்கு நடுவே யானை குட்டியையும் ஈன்றது.

பிறகு குட்டியைத் தழுவிக்கொண்டு அதனை எழுந்து நிற்க வைத்து காட்டுக்குள் தாய் யானையும், குட்டி யானையும் திரும்பிச் சென்றது.

Elephant
யானை சாணத்திலிருந்து எடுக்கப்பட்ட காபி கொட்டை - இவ்வளவு விலையா? - பாகம் 1

சுமார் 1 மணி நேரமாக யானையின் சத்தம் மட்டுமே சாலையின் நடுவே கேட்க, வேறு எந்த வாகனத்தின் சத்தமும் கேட்கவில்லை.

அவ்வளவு நேரமும் வாகனங்கள் வரிசையாக யானைக்காகக் காத்துக்கொண்டு சத்தம் எழுப்பாமல் இருந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Elephant
கம்போடியா : உலகின் தனிமையான யானை கான்வா நிலை இப்போது இதுதான்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com