உக்ரைன் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய iPhone - எப்படி? |Viral Video

பெறும் போர்களில் உயிர் தப்பியவர்களைப் பற்றிய பலதரப்பட்ட கதைகள் இருந்தாலும், ஒரு சில கதைகள் நம் மனதில் நின்றுவிடும். அப்படித்தான் இருக்கிறது இந்த உக்ரைன் வீரரின் உயிர் தப்பிய கதையும். தன்னை நோக்கி வந்த குண்டு, அதிர்ஷ்டவசமாக அவரது Iphoneல் பட, உயிர் பிழைத்திருக்கிறார் உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர்
Iphone that saved the soldier's life
Iphone that saved the soldier's lifeTwitter
Published on

பொதுவாகவே இராணுவ வீரர்கள் போருக்குச் செல்லும் முன் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல உபகரணங்களை பயன்படுத்துவார்கள். Bullet-proof vest, பாதுகாப்பு கண்ணாடி, கனத்த தொப்பி போன்ற பல பொருட்கள் பயன் படுத்துவார்கள். இவற்றைப் பயன்படுத்தும் நோக்கம் தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே.

இப்படி வழக்கமாக பயன்படுத்தும் உபகரணங்கள் எதுவுமல்லாமல், புதியதொரு கருவி உக்ரைன் நாட்டு ராணுவ வீரர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

அந்த ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய Bullet-proof vest-ல் இருந்து தன்னுடைய iPhoneஐ எடுத்து காட்டுகிறார். அந்த iPhone னின் பின்பகுதி குண்டால் துளைக்கப்பட்டு இருந்தது. அவரை நோக்கி பாய்ந்த குண்டு, இந்த iPhoneல் பட்டதனால், அவர் உயிர் தப்பியுள்ளார்.

Iphone that saved the soldier's life
உக்ரைன் ரஷ்யா : பிரமாண்ட கப்பலை தாக்கியதா Ukraine? கோபமான Russia - தீவிரமடையும் போர்

எப்படி குண்டடிப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர் எதுவும் வெளியிடவில்லை. இந்த வீடியோவை Reddit எனப்படும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது பகிரப்பட்டதிலிருந்து லைக்குகள், கமென்ட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன.

ஒருவர், நாம் அடிக்கடி பயன்படுத்தும் பழமொழியான, "An apple a day keeps the doctor away" என்று கமென்ட் செய்திருந்தார். இன்னொருவர், "ஐஃபோன்கள் ஒருவழியாக இதற்காவது பயன்படுகிறதே!" என்று கலாய்த்திருந்தார்.

மேலும் சிலர் இத்தகைய smartphone னில் பயன்படுத்த படும் பொருட்களை கொண்டு பாதுகாப்பு கேடையங்களை தயாரிக்கலாம் என்று கூறியிருந்தார்

எது எப்படியோ, தலைக்கு வந்தது தலப்பா ஓட போச்சு!

Iphone that saved the soldier's life
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com