விற்பனைப் பதிவு

விற்பனைப் பதிவு

Twitter

"கணவர் விற்பனைக்கு" இணையத்தை கலக்கிய அயர்லாந்து பெண்ணின் அடாவடிப் பதிவு - ஏன்?

”ஜானுக்கு 37 வயது ஆகிறது. இவர் 6.1 அடி உயரம் கொண்டவர். இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு. அவருக்கு முறையாக இரை வைத்து, தண்ணிக் காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார்.
Published on

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

எனும் கண்ணதாசன் வரிகள் சமீபமாக வாட்ஸப் ஸ்டேட்டஸ்களில் அதிகமாக உலவுவதைக் காண முடிகிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த வரிகள் ட்ரெண்டாக காரணம் அது எத்தனை உண்மையானது என்ற மெய்சிலிர்ப்புதான். அந்த வாசல் தோறும் இருக்கும் வேதனை கொஞ்சம் அதிகமாகிப் போனதாலோ என்னவோ ஒரு பெண் தன் கணவரை ஏலம் விட முயற்சி செய்துள்ளார்.


ட்ரேட் மீ எனும் நிறுவனத்தில் ஆன்லைனில் உபயோகப்படுத்தப்பட்ட பழைய பொருட்களை ஏலம் விட முடியும். இதனைப் பொருட்களை வாங்கவும் விற்கவும் மக்கள் பயன்படுத்துகின்றனர். சிறிய பொருட்கள் முதல் சொத்துகள் வரை இங்கு விற்கப்படுகின்றன. இந்த தளத்தில் தான் அந்த விநோத ஏலமும் நடைபெற்றிருக்கிறது.

<div class="paragraphs"><p>காதல்</p></div>

காதல்

Facebook

அயர்லாந்தைச் சேர்ந்த லிண்டா மலிஸ்டர் என்ற பெண்கணவர் ஜான் மலிஸ்டர் உடன் நியூசிலாந்தில் வசித்துப் வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது ஏலத்தில் விற்பனைக்கு உள்ளதாக அந்த இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தார் லிண்டா. "ஜானுக்கு 37 வயது ஆகிறது. இவர் 6.1 அடி உயரம் கொண்டவர். இவர் விவசாயம், மாடு வளர்ப்பு, வேட்டை, மீன் பிடிப்பு போன்ற தொழில்களை செய்து வருகிறார். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு. அவருக்கு முறையாக இரை வைத்து, தண்ணிக் காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார்.

<div class="paragraphs"><p>விற்பனைப் பதிவு</p></div>
சுவீடன் : சிகரெட் பஞ்சுகளை எடுக்கும் காக்கைகள்

ஆனால், இன்னும் சில வீட்டுப் பயிற்சி இவருக்குத் தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது. இந்த விற்பனை இறுதியானது. ரிட்டன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது’’ என்று அந்த விளம்பரத்தில் கூட கூறப்பட்டிருந்தது. ஏல விளம்பரம் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 பேர் அதற்கு ஏலம் கேட்டிருந்தனர். ரூ.5 ஆயிரம் வரை விலை கேட்கப்பட்டது. இதற்கிடையே, வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, டிரேட் மீ இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியது. சமீப காலங்களில் தனது கணவர் விற்பனைக்கு என்று வெளியிடப்பட்ட முதலாவது விளம்பரம் இது என்று அந்த நிறுவனத்தின் மேலாளர் ஜேம்ஸ் ராயன் தெரிவித்தார்.

ஏல விவகாரம் தனது நண்பர்கள் மூலமாக ஜானுக்கு தெரியவந்தது. “எல்லாத்தையும் பார்த்துச் சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை” எனக் கூறியிருக்கிறார்.

logo
Newssense
newssense.vikatan.com