கொல்கத்தா போலீஸ் : சைபர் குற்றங்கள் தடுக்க ராக்கி பாய் ஸ்டைலில் அட்வைஸ்

கேஜிஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸ் டைலாக் சொல்லும் ராக்கி பாய் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு பொதுமக்களுக்கு கொல்கத்தா போலீஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
Cyber Crime Awareness
Cyber Crime AwarenessTwitter
Published on

அறிவியல் தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி, காரணமாக தனி நபரின் தகவல்களை பரிமாற்றக்கொள்வது, பரிமாற்றப்படுவது என அனைத்து எளிதாகி விட்டது. எந்த அளவிற்கு நேர்மறையான பயன்பாடுகள் உள்ளனவோ, அதே சமயம் தொழில்நுட்ப வளர்ச்சியின் தவறான பயன்பாட்டின் விளைவாக, குற்றசம்பவங்களும் அதிகரித்து வருகின்றன

இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள், பண இழப்பு தடுக்க காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் இணையவழி குற்றவாளிகள் பெண்கள் போல ஆண்களிடமும், ஆண்கள் போல பெண்களிடமும் பேசி பண பறிப்பில் ஈடுபடுகின்றனர்.

போலியான நபர்களை நம்பி உங்களின் சுய விபரங்களை பகிராதீர்கள் என காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

அந்தவகையில் OTP- யை பகிராதீர்கள் என சமீபத்தில் வெளியான கேஜிஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற மாஸ் டைலாக் சொல்லும் ராக்கி பாய் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு பொதுமக்களுக்கு கொல்கத்தா போலீஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். இவை இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com