வயது தடை இல்லை: 85 வயதில் முதல் காரை வாங்கிய முதியவர் - இன்ஸ்டாவில் பெருமிதம்

எல்லாரும் தளர்ந்து சோர்ந்து போகிற வயதில் தனது பிசினஸைத் தொடங்கி வெற்றி கண்டிருக்கிறார் ராதா கிருஷ்ண சௌத்ரி. இவரை நாஞ்சி என்றும் அழைக்கின்றனர்.
வயது தடை அல்ல
வயது தடை அல்லTwitter

எத்தனை மொபைல் போன்களை வாங்கினாலும் முதல் போனை வாங்கிய தருணம் மறக்க முடியாதது. முதல் சைக்கிள், முதல் பைக், முதல் சம்பளம் என எல்லாமே மறக்க முடியாதது தான். இந்த முதல் முறை நிகழ்வு நடக்க வயது ஒரு தடையல்ல என்கிறார் வீடியோவில் இருக்கும் 85 வயது முதியவர்.

எல்லாரும் தளர்ந்து சோர்ந்து போகிற வயதில் தனது பிசினஸைத் தொடங்கி வெற்றி கண்டிருக்கிறார் ராதா கிருஷ்ண சௌத்ரி. இவரை நாஞ்சி என்றும் அழைக்கின்றனர்.

Avimee Herbal என்ற பெயரில் ஆயுர்வேத நிறுவனத்தை நடத்தி வருகிறார் நாஞ்சி.

அந்த நிருவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட வீடியோவில், "நான் 85 வயதில் முதல் காரை வாங்கினேன். என்னுடைய தொழிற்சாலையைத் தொடங்கியிருக்கிறேன். எப்படி எனத் தெரிந்துகொள்ள தலைப்பை வாசியுங்கள்" என கூறப்பட்டிருந்தது.

வயது தடை அல்ல
கோவை: ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு - ஆனந்த் மகிந்திராவின் அன்னையர் தின சர்ப்ரைஸ்

வீடியோவின் தலைப்பில், "நாங்கள் Avimee Herbal அறிமுகப்படுத்திய ஆறு மாதத்தில் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறோம். இது ஓவர்நைட் வெற்றியா?" என கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அத்துடன் அவர்களது வெற்றிக்கு, நோக்கம் மற்றும் நம்பிக்கை, கடின உழைப்பு, அணியாக உழைப்பது போன்றவையே காரணம் எனக் கூறுகின்றனர்.

அவர்களது வெற்றிக்காண ரகசியத்தையும் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை 19 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர்.

வயது தடை அல்ல
சூர்யா இரண்டு பவுன் செயின் போட்டார், சினிமாவை கலகலகும் காரியாபட்டி லட்சுமி பாட்டி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com