"சிங்கிளாக இருங்கள்" - நாகாலாந்து அமைச்சர் விடுத்த அழைப்பு இணையத்தில் வைரல்

உலக மக்கள் தொகை அதிகரிக்கும்போது அதனுடன் இணைந்தே விலைவாசி, உணவு, தண்ணீர் போன்ற விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் பல முயற்சிகளை செய்துவரும் நேரத்தில், நாகாலாந்தின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ள விஷயம், இணையத்தை கலக்கி வருகிறது.
Temjen Imna Along
Temjen Imna AlongTwitter
Published on

சமூக வலைத்தளங்கள், எல்லாத்தட்டு மக்களையும் இணைக்கும் ஒரு கருவியாக இருக்கிறது. அதிலும் டிவிட்டர் என்ற ஒன்று, நம்மை நாட்டை ஆள்பவர்களுடனே நம்மை இணைத்துவிடுகிறது. இதனால், மக்களுக்கும் ஆட்சி செய்பவர்களுக்கும் இடையில் நல்ல புரிதல்கள் வருமென்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அவர்களின் நகைச்சுவை ஆற்றலை நமக்கு காட்டுகிறது.

Twitter Icon
Twitter IconPexels

உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியுள்ளதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023ல் இந்திய மக்கள் தொகை சீனாவை முந்தி முதலிடத்தை பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகை அதிகரிக்கும்போது அதனுடன் இணைந்தே விலைவாசி, உணவு, தண்ணீர் போன்ற விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் பல முயற்சிகளை செய்துவரும் நேரத்தில், நாகாலாந்தின் அமைச்சர் ஒருவர் கூறியுள்ள விஷயம், இணையத்தை கலக்கி வருகிறது.

நாகாலாந்தின் கல்வி அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் தனது டிவிட்டர் பக்கத்தில் "உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி இளைஞர்கள் குழந்தைப் பேறு மற்றும் மக்கள்தொகை குறித்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

அப்படி இல்லை என்றால் என்னைப்போல சிங்கிளாக இருங்கள். நாம் ஒன்றிணைந்து வளமான சமுதாயம் உருவாக வழிசெய்வோம்" என்று பதிவிட்டிருந்தார்.

இது நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத் தீயாக பரவியுள்ளது. முக்கியமாக, "வாருங்கள்..சிங்கிள்கள் இயக்கத்தில் இன்றே இணைந்துகொள்ளுங்கள்" என்ற வாசகம், சிங்கிள்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

அவரது இந்த ட்வீட்டை தொடர்ந்து, பலரும் அமைச்சர் அலோங் திருமணம் ஆனவரா இல்லையா என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இதற்கு பதிலளிக்கும்போது, "நாகாலாந்து அமைச்சர் திருமணத்திற்கு எதிரானவர் அல்ல...அவர் அவரது சிங்கிள்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கிறார்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த ஷாதி டாட் காம் நிறுவனர் அனுபம் மிட்டல், "இதற்கு ஏதாவது செய்யவேண்டும்" என பதிவிட்டார். இதற்கு அமைச்சர் அலோங் தான் தற்போது மிகவும் சிறப்பாக இருப்பதாகவும், சல்மான் கான் திருமணத்திற்காக காத்திருப்பதாகவும் கவுன்டர் அடித்ததும் வைரலாகி வருகிறது.

ஒரு டிவிட்டர் பயனர், "இனிமேலும் நான் சிங்கிளாக இருப்பதை நினைத்து வருத்தப்படப் போவதில்லை..நான் இந்த அமைப்பின் பெருமைமிக்க உறுப்பினர்" என பதிவிட்டிருந்தார்.

அலோங்கின் இந்த ட்வீட்டுக்கு பின்னர், கூகுளில் அலோங்கின் மனைவி யாரென சிலர் தேடியுள்ளனர். இந்த தேடலும் அவரது கண்களில் பட, கூகுளை டேக் செய்து, தானும் தன் மனைவியை தேடி வருவதாக பதிலளித்திருந்தார்.


இதற்கு முன்னர் அமைச்சர் அலோங் சிறிய கண்களை கொண்டுள்ளதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பதிவிட்டிருந்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

Temjen Imna Along
ஒரே ஆட்டோவில் 27 பேர் பயணம் - அதிர்ந்த போலீசார் | வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com