ஜோபைடனுடன் ஒத்துப்போகும் திருமாவளவன் - ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒரு வார்த்தை ட்வீட்

அமெரிக்காவில் தொடங்கிய இது ஆரம்பத்தில் பலருக்கும் புரியவும் பிடிபடவும் இல்லை. ஆனால் ஒரே நாளில் நம்ம ஊர் வரை பறந்து வந்திருக்கிறது.
Tweet
TweetTwitter
Published on

எலான் மஸ்க் முதல் எடப்பாடியார் வரை இன்று உலாவிக்கொண்டிருக்கிறது இந்த ஒரு வார்த்தை ட்வீட். ரயில் வண்டி போல நிற்காமல் போயிக்கொண்டே இருக்கும் இந்த ட்வீட்டுக்கு ஆரம்பமாக இருந்தது ஒரு தொடர்வண்டி நிறுவனம் தான்.

ட்ரெயின்ஸ் என்ற வார்த்தையில் தொடங்கிய ட்ரெண்ட் தான் நிற்காமல் புகைந்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் தொடங்கிய இது ஆரம்பத்தில் பலருக்கும் புரியவும் பிடிபடவும் இல்லை. ஆனால் ஒரே நாளில் நம்ம ஊர் வரை பறந்து வந்திருக்கிறது.

பக்கத்து வீட்டு பையன் கூட அவனது காதலியின் பெயரை ஒரு வார்த்தையில் ட்வீட் செய்திருக்கிறான்.

புகழ்பெற்ற செய்தி நிறுவனமான சிஎன்என் "Breaking News'' என ட்வீட் செய்த போது ஏதோ இன்டர்ன் வந்த சிறுவன் செய்த தவறாக இருக்கும் என அனைவரும் நினைத்தனர்.

முக்கியமாக அரசியல் வட்டாரத்தில் இது தீயாக பரவிவந்தது. அடிதடியில் சிக்கியிருக்கும் அதிமுக கட்சி 'எடப்பாடியார்' எனப் பதிவிட்ட ஒரு வார்த்தை எரியும் இரட்டைத் தலைமை பிரச்னையில் எண்ணெயை ஊற்றியது.

எடப்பாடியாரே ட்வீட் செய்த வார்த்தை இதுதான்...

தமிழ்நாட்டின் முதல்வரான ஸ்டாலின் செய்த ட்வீட் "திராவிடம்"

இந்த திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை போட்ட ட்வீட்,

தமிழகத்தில் இருக்கும் மக்களுக்குள்ளாகவே திராவிடம், தமிழ் எனப் பல அடையாளங்களா என்று சின்னம்மா பதிவிட்ட ட்வீட் தான்,

இது வேற ஒற்றுமையாக தெரிகிறதே...

இன்னும் சில அரசியல் தலைவர்களின் ட்வீட்கள்,

மக்கள் என்ற ட்வீட்டின் மூலம் அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையே சிக்கித்தவித்த இந்த ட்ரெண்ட் சினிமா பக்கமும் திரும்பியது,

சரி இந்த ட்விட்டர் ட்ரெண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் அமெரிக்க அதிபர் ஜோபைடனும் ஒத்துப்போவது எப்படி என்று தானே கேட்கிறீர்கள்? இதோ திருமாவளவனின் ட்வீட்,

இதேப் போல அமெரிக்க அதிபரான ஜோபைடன்,

மொழியால் பிரிந்திருப்பவர்களை வார்த்தையால் இணைத்திருக்கிறது ட்விட்டர்!

இன்னும் பிரதமர் மோடி முதல் உதயநிதி வரை இந்த ஒரு வார்த்தை அரசியல் ட்ரெண்டில் இணையாதவர்கள் என்ன ட்விட் செய்வார்கள் என உங்களது கணிப்பை எங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவியுங்கள். அதற்கு முன்னர் நியூஸ் சென்ஸின் ஒருவார்த்தை ட்விட்,

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com