ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்twitter

ரஜினிகாந்த் : ரசிகர் கொடுத்த தாமரையை வாங்கிய Rajini - அரசியல் சாயம் பூசிய நெட்டிசன்கள்

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்த ரஜினி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ரசிகர் ஒருவர் கொடுத்த தமரை மலரை பெற்றுக் கொண்ட ரஜினி, அதனை கையில் வைத்துக் கொண்டே டாட்டா காட்டினார்.
Published on

நான் அரசியலுக்கு வருவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும், தமிழக மக்களிடம் எழுச்சி வரவேண்டும் என்று 3 வருடங்களாக தமிழக அரசியல் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய பெருமை ரஜினியை சேரும்.

கடந்த 2017ஆம் ஆண்டில் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். 2020 ஆம் ஆண்டில் தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்twitter

இருந்தபோதிலும் வருங்காலங்களில் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவாரா.? என்ற எண்ணம் ரசிகர் மத்தியில் எழுந்து வந்தது. அதனையும் அடியோடு கிள்ளி வருங்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக ரஜினிகாந்த் அறிவித்து விட்டார்.

இந்த நிலையில், பாஜகவின் கட்சி சின்னமான தாமரை மலரை தனது கையில் பெற்றுக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த். சித்திரைத் திருநாள் தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களை சந்தித்த ரஜினி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, ரசிகர் ஒருவர் கொடுத்த தமரை மலரை பெற்றுக் கொண்ட ரஜினி, அதனை கையில் வைத்துக் கொண்டே டாட்டா காட்டினார். இதற்கு தற்போது நெட்டிசன்கள் அரசியல் சாயம் பூசி இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக, நடிகர் ரஜினி பாஜகவுக்கு ஆதரவாகவே இருப்பதால் அவர் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

logo
Newssense
newssense.vikatan.com