அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் அரியவகை தங்க புலி சமீபத்தில் காணப்பட்டுள்ளது. அசாம் முதல்வர் ஹிமந்தா பீஸ்வ சர்மா தனது எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நேற்று தேசிய சுற்றுலா தினம் என்பதனால் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "கம்பீரமான அழகு! காசிரங்கா தேசிய பூங்காவில் அரியவகை தங்கப் புலி சமீபத்தில் காணப்பட்டது. #NationalTourismDay" என கேப்ஷன் வழங்கியுள்ளார்.
2008ம் ஆண்டு தங்க புலியின் இருப்பு தெரியவந்தது. 2020ம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் முதன்முதலாக தங்க புலியின் புகைப்படம் வெளியிடப்பட்டது. உலகில் இந்த வகைப் புலி ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது எனக் கூறப்பட்டது. ஆனால் காசரங்காவில் மட்டும் 4 தங்க புலிகள் இருப்பது காண்டறியப்பட்டுள்ளது.
தங்க நிறத்தில் பிறக்கும் புலிகள் நோயெதிர்ப்பு சக்தி குறைவாகவும், இனப்பெருக்க ஆரோக்கியத்தில் குறைபாட்டுடனும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust