அருணாசலப் பிரதேசத்தின் வனப்பகுதியில் 110 ஆண்டுகளுக்கும் பழமையான லிப்ஸ்டிக் தாவரத்தை, இந்தியத் தாவரவியல் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெண்களின் மேக்கப் சாதனங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று லிப்ஸ்டிக். எங்கு சென்றாலும் பையில் ஒரு லிப்ஸ்டிக் வைத்திருப்பார்கள். கேமிக்கல், ஆர்கானிக் எனப் பல வகை லிப்ஸ்டிக்குகளை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த லிப்ஸ்டிக்கை தயாரிக்கப் பயன்படும் அரிய வகை தாவரம் அருணாசலப் பிரதேசத்தின் வனப்பகுதியில் 110 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ளது.
1912ம் வருடம் இங்கிலாந்து தாவரவியல் வல்லுநர் ஸ்டீபன் ட்ராய்ட் டன் என்பவர் இந்திய லிப்ஸ்டிக் தாவரம் என்ற அரியவகை செடியை அருணாசல பிரதேசத்தில் அடையாளம் கண்டார்.
இதையடுத்து காலப்போக்கில் அந்த தாவரத்தைக் காண முடியவில்லை. இந்நிலையில் இந்தியத் தாவரவியல் ஆராய்ச்சி துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சென்ற வருடம் டிசம்பர் மாதம் அருணாசலப்பிரதேச வனப்பகுதியில் பூக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது Aeschynanthus monetaria Dunn என்ற அரிய வகை தாவரத்தைக் கண்டறிந்தார். குழாய் போன்ற சிவப்பு நிறத்தாலான இந்த தாவரம் லிப்ஸ்டிக் தாவரம் என அழைக்கப்படுகிறது.
இந்த லிப்ஸ்டிக் தாவரம் 543 முதல் 1134 மீட்டர் உயரத்தில் உள்ள பசுமையான ஈரப்பதம் நிறைந்த காடுகளிலேயே வளரும். அரியவகை தாவரமாகக் கருதப்படும் இது அழியும் நிலையில் உள்ளது எனவும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust