ஸ்காட்லாந்தில் ப்ளம்பிங் வேலை செய்தபோது வீட்டின் கீழே புதைந்திருந்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. இந்த கடிதம் விஸ்கி பாட்டிலுக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது.
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் என்ற இடத்தில் வசிப்பவர் எலிட் ஸ்டிம்ப்சன் என்ற பெண். இவர் தன் வீட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்காக ஆட்களை வரவழைத்திருக்கிறார்.
அப்போது வீட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையில் போடப்பட்டிருந்த பலகைகளை பெயர்த்து எடுத்தனர். அங்கே பழைய விஸ்கி பாட்டில் ஒன்று கிடைத்துள்ளது. இதை வீட்டின் உரிமையாளரிடம் அந்த பிளம்பர் கொடுத்துள்ளார்.
முதலில் ஆச்சரியப்பட்ட எலிட் பின்னர் அதனுள் இருக்கும் கடிதத்தை கவனித்திருக்கிறார். அந்த கடிதம் முன்னாள் பிரிட்டிஷ் அரசி விக்டோரியாவின் காலத்தில் எழுதப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. அக்டோபர் 6 1887ஆம் ஆண்டு இரு கட்டிட பணியாளர்களால் எழுதப்பட்டுள்ளது.
”ஜேம்ஸ் ரிச்சி மற்றும் ஜான் க்ரீவ் ஆகிய இருவர் இந்த தளத்தை அமைத்தனர். ஆனால் இந்த விஸ்கியை அவர்கள் அருந்தவில்லை” என தெரிவித்துள்ளனர்
பிபிசி ஸ்காட்லாந்தின் அறிக்கையின்படி, அந்த காலத்தில் வீட்டில் பணிபுரியும் பெண்களின் அறையாக இது இருந்திருக்கலாம் எனவும், அப்போது இந்த கடிதம் இங்கு வைக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும், எப்படி சரியாக அந்த பாட்டில் உடைபடாமல் தரை பெயர்க்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த பிளம்பர், தற்செயலாகவே இது நடந்தது எனவும் கூறினார்.
“வீட்டின் பைப்லைனை கண்டறிய அறையின் அளவை மனதில் கொண்டு தான் தரை பெயர்த்தெடுக்கப்பட்டது. ஆனால், நான் சரியாக பாட்டிலை சுற்றி சதுரமாக வெட்டி எடுத்தது எனக்கே ஆச்சரியம் அளித்தது.” என்றார்
கண்டுபிடிக்கப்பட்ட 135 வருட பழைய கடிதம் தற்போது கவனம் பெற்று வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust