"சம்பள பேச்சுவார்த்தைக்கு அம்மா வரலாமா?" - இணையத்தை கலக்கும் இளைஞரின் கேள்வி

இதை சமாளிக்க பலரும் பல தரப்பட்ட அட்வைஸ்களை கொடுப்பார். இருந்தாலும் இது ஒரு பிரச்னையாகவே இருக்க, இங்கு இந்த இளைஞர் கேட்டுள்ள இந்த கேள்வி, பலரின் சம்பளப் பிரச்னையை தீர்க்கலாம்.
Interview (rep)
Interview (rep)Pexels
Published on

சம்பளம் குறித்து பேச அம்மாவை அழைத்து வரலாமா என்று ஒருவர் கேட்டு பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வேலை தேடி செல்லும்போது இன்டெர்வியூக்களை சமாளிப்பது ஒரு கலை என்றால், எல்லாம் முடிந்த பின் நம் சம்பளத்தை பற்றிய பேச்சுவார்த்தையில் இருக்கிறது நம் அசல் திறமை.

நம் திறனுக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற பரவலான குற்றச்சாடு இருந்தாலும், வேலைக்கு சேரும்போது நாம் எவ்வளவு நேர்த்தியாகப் பேசுகிறோமோ நமக்கான சம்பளம் நம் கையில் கிடைக்கும். இதை சமாளிக்க பலரும் பல தரப்பட்ட அட்வைஸ்களை கொடுப்பார். இருந்தாலும் இது ஒரு பிரச்னையாகவே இருக்க, இங்கு இந்த இளைஞர் கேட்டுள்ள இந்த கேள்வி, பலரின் சம்பளப் பிரச்னையை தீர்க்கலாம்.

அப்படியென்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்கிறீர்களா?

தனது நேர்காணலின் போது சம்பளம் குறித்த பேச்சுவார்த்தைக்கு தன் தாயை அழைத்து வரலாமா என்று கேட்டுள்ளார் நிதேஷ் யாதவ் என்ற அந்த இளைஞர். மேலும் அவர், "என்னைவிட அம்மா சிறப்பாக டீலை முடிப்பார்" என்றும் கூறியுள்ளார்.

இதை தன் டிவிட்டர் பக்கத்தில் நிதேஷ் பகிர, பலரும் இந்த யோசனையை வரவேற்றுள்ளனர். மேலும் இவர் இந்த பதிவை LinkedIn-லும் பகிர, நெட்டிசன்கள், அவர்களது அம்மாக்கள் என்ன கூறுவார், அவர் எப்படி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

ஒருவர் தன் தாய் பேச்சுவார்த்தை நடத்தினால் அந்த HR மயங்கியே விழுந்துவிடுவார் என்றார். இன்னொருவரோ, அவரது தாய் பேசினால், அந்த நிறுவனத்தை தன் மகனால் தான் கரையேற்றமுடியும் என்பது போல நினைக்கவைத்து நல்ல சம்பளத்தை வாங்கிக்கொடுத்துவிடுவார் என்றார்.

இப்படியாக ஒருவர், அந்த நிறுவனத்தையே தன் மகனின் பெயருக்கு மாற்றிவிடும் அளவிற்கு அவரது தாய் பேசுவார் என்றும் கூறினார்.

ஒரு பக்கம் இப்படி பலர் கூறிவர, இன்னொரு பக்கம், ஒரு வேளை அந்த HR இந்த பேச்சுவார்த்தைக்கு தன் தாயை அழைத்துவந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

யுத்தமே...!

Interview (rep)
சமந்தாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட் ஹேக் : ரசிகர்களை குழப்பிய பதிவு - அப்படி என்ன post?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com