அமெரிக்கா : ஒரு நாள் மேயராக பதவி வகித்த பூனை - எப்படி சாத்தியம் ?

ஜிங்ஸ்சின் உரிமையாளர் மியா 100 டாலர் செலுத்தி ஜிங்சை ஒருநாள் மேயராக்கினார். வெறும் 72 பேர் மட்டுமே வசிக்கும் ஹெல் நகரின் ஒரு நாள் மேயராக ஜிங்ஸ் பதவி வகித்தது.
jinx cat
jinx catTwitter
Published on

அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஹெல் என்ற சிறிய நகரின் மேயராக பூனை ஒன்று பதவியேற்ற சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜிங்ஸ் என்ற பெயரைக் கொண்ட பூனை, வழக்கத்துக்கு மாறாக பெரிய கண்களுடன் உடல் குறைபாட்டுடன் கலிபோர்னியாவில் பிறந்தது.

பூனையின் உரிமையாளரான மியா, ஜிங்க்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று ட்விட்டரில் நகைச்சுவையாகக் கூறிய தகவல் இணையத்தில் வைரலானது.

இன்ஸ்டாகிராமில் 400,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட ஜிங்ஸ் சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்தது.

jinx cat
jinx catTwitter


இந்நிலையில் 100 டாலர் பணம் செலுத்தி ஹெல் நகரின் மேயராக யார் வேண்டுமென்றாலும் பதவி வகிக்க அந்நகர நிர்வாகம் அனுமதி அளித்தது.

இதையடுத்து ஜிங்ஸ்சின் உரிமையாளர் மியா 100 டாலர் செலுத்தி ஜிங்சை ஒருநாள் மேயராக்கினார். வெறும் 72 பேர் மட்டுமே வசிக்கும் ஹெல் நகரின் ஒரு நாள் மேயராக ஜிங்ஸ் பதவி வகித்தது.

விலங்குகள் மேயர்களாக பதவி வகித்தது இதுவே முதன்முறையாகும். ஒரு நாள் மேயராக ஜின்ஸின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

jinx cat
119 வயதில் இறந்த உலகின் மூத்த பெண்மணி - வருந்தும் ஜப்பான்

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com