Naked Crepe: தோசைக்கு வித்தியாசமான பெயர் வைத்த உணவகம் - என்ன இவ்வளவு விலையா? - Viral News

உதாரணத்துக்கு தமிழ்நாடு கிராமங்களில் தேன் மிட்டாய் என பெட்டிக் கடையில் விற்கப்படுவதை, நம் தமிழர்கள் Honey infused and glazed candy என்கிற பெயரில் பாக்கெட் போட்டு பல டாலர்களுக்கு விற்கிறார்கள்.
Masala Dosa
Masala DosaCanva
Published on

இந்தியா என்கிற நாடே பல நாடுகளின் தொகுப்பு என பல தரப்பினர் கூறிக் கேட்டிருப்பீர்கள். பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள் இருந்தாலும்... உணவுப் பழக்கங்களில் நம் இந்தியர்களை எவரும் அடித்துக் கொள்ள முடியாது என பெருமையாகக் கூறலாம்.


இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைகளின் போது முருக்கு, சீடை, அதிரசம், ரவா லட்டுக்கள் மற்ற மத நண்பர்கள் வீட்டுக்கு பார்சல் செய்யப்படும். அதே போல கிறிஸ்துமஸின் போது அவர்கள் வீட்டு கேக்குகள், ரொட்டிகள் நம் வீட்டுக்கு வரும். ரம்ஜான் பண்டிகையின் போது இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் நமக்கு லெக் பீசோடு விருந்து கிடைக்கும்.

இதே இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டால் தங்கள் மாநில உணவுகளை ஒரு கடையாக போட்டு கல்லாகட்டும் சிலரைப் பார்த்திருப்போம். குஜராத்திகள் என்றால் தேப்லா, வங்காளிகள் என்றால் மட்டன் ரோகன் ஜோஷ் முதல் சந்தேஷ் வரை, தென் இந்தியர்கள் என்றால் இட்லி, தோசை, வடை, நெய் சோறு, பிரியாணி, மசால் வடை, பழம் பொறி... என அந்த நாட்டையே கமகமக்க வைத்துவிடுவார்கள்.

தொடக்கத்தில் ஒரு சின்ன தயக்கத்தோடு முதல் வாயை எடுத்து வைக்கும் அயல் நாட்டுக்காரர்கள், பிறகு எக்ஸ்ட்ரா பிளேட் கேட்பதைப் பார்க்கலாம்.

ஆனால் நம் மக்களும் இப்போது ஆங்கிலேயர்களைப் போல நம் உணவுகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

உதாரணத்துக்கு தமிழ்நாடு கிராமங்களில் தேன் மிட்டாய் என பெட்டிக் கடையில் விற்கப்படுவதை, நம் தமிழர்கள் Honey infused and glazed candy என்கிற பெயரில் பாக்கெட் போட்டு பல டாலர்களுக்கு விற்கிறார்கள்.

அப்படியிருக்க, அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தின் உணவுப் பட்டியலில், தோசை, சாம்பார் வடை போன்ற உணவுகளுக்கு வைத்திருக்கும் பெயர் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Masala Dosa
கோவை: ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு - ஆனந்த் மகிந்திராவின் அன்னையர் தின சர்ப்ரைஸ்

சியட்டிலில் உள்ள Indian Crepe Co என்ற உணவகத்தில் இந்திய உணவுகளும் கிடைக்கும். இந்த ரெஸ்டாரன்ட்டில் தென்னிந்தியாவில், முக்கியமாகத் தமிழர்களின் பிடித்தமான உணவான தோசை, இட்லி, சாம்பார் வடை போன்றவை கிடைக்கிறது.

இதை மெனுவில் வைத்துள்ள அந்த உணவகம், அதன் பெயர்களை மாற்றியுள்ளது, படிக்க சற்று நகைச்சுவையாக இருந்தாலும், நம் இந்தியர்களாலேயே ஆர்டர் செய்ய முடியாதளவு இருக்கிறது இந்த பெயர்கள். இது நம்ம ஊர் உணவு பிரியர்களுக்கு மனவலியைத் தந்துள்ளது.


சாம்பார் இட்லி - Dunked Rice Cake Delight

சாதா தோசை - Naked Crepe

மசால் தோசை - Smashed Potato Crepe

சாம்பார் வடை - Dunked Doughnut Delight

இது என்னடா தோசைக்கு வந்த சோதனை.. ஏன் இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள் என இணையத்தைத் துலாவினால்... மாவு மற்றும் நீர் அல்லது பாலைச் சேர்த்து சமைக்கும் உணவுக்கு க்ரீப் (Crepe) என்று பெயராம். Crepe என்பது மைதா மாவினால் தயாரிக்கப்படும் மிக மெல்லிசான ஒரு உணவு வகை.

இதன் வடிவம் பார்க்க தோசையைப் போல இருக்கும். ஆனால் இதை தனியாக ஒரு உணவாக உட்கொள்ள முடியாது. இதை பேஸ் ஆக வைத்து, இதனுடன் சாக்லேட், க்ரீம், பழங்கள் சேர்த்து ஸ்வீட்டாக அல்லது காய்கறிகளுடன் சேர்த்து Savoury ஆகவும் சாப்பிடலாம்.

வட்ட வடிவில் மிருதுவான பன் மீது கிரீம், மிட்டாய் போன்றவைகளை பூசி பரிமாறும் உணவை டோனட் (Doughnut) என்பர். வடையின் வடிவமும் டோனட்டின் வடிவமும் ஒன்றாகத்தான் இருக்கும். இதனால் தான் இந்த பெயர் போல.


மாவு, வெண்ணெய், எண்ணெய், உப்பு, சர்க்கரை, பேகிங் சோடா போன்றவைகளைச் சேர்த்து அவனில் வேக வைத்து எடுத்தால் அதை பிரெட் அல்லது கேக் என்பர்.

நம் மக்கள், மேலை நாட்டு மக்களுக்கு ஏற்றவாறு நம் ஊர் உணவுகளின் பெயரை மாற்றி, அதன் கீழ் ஒரு சிறு விளக்கம் கொடுத்து, நம் உணவை குறித்த புரிதலை ஏற்படுத்தி ஆர்டர் செய்ய வைக்க இப்படி செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.


மசால் தோசைக்கு Smashed Potato Crepe என பெயர் மாற்றம் செய்ததைக் கூட ஒப்புக் கொள்ளலாம். ஆனால் ஒரு சாதா தோசை சுமார் 1,400 ரூபாய் ($17.59 ) மசால் தோசை சுமார் 1,495 ரூபாய் என்பதைப் பார்க்கும் போதுதான், நாமே விமானம் பிடித்து அமெரிக்காவில் தோசைக் கடை போட்டு செட்டிலாகிவிடலாம் என்று தோன்றுகிறது.

இந்த டிவிட்டர் பதிவைப் பார்த்துவிட்டு, இந்திய உணவுகளுக்கு இந்திய பெயர்களைப் பயன்படுத்தாது சரியா தவறா என பாராட்டியும் விமர்சித்தும் வருகிறார்கள் பல டிவிட்டர் வாசிகள். எது எப்படியோ Indian Crepe Co ஹோட்டல் இன்று இந்தியாவிலும் பிரபலமடைந்துவிட்டது.

Masala Dosa
இட்லி, தோசை : நல்ல உணவுகளா அல்லது வாயுவை சேர்க்கும் அமில உணவுகளா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com