”உங்க கிச்சன் அசுத்தமா இருக்கு” - கோலியின் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்த ரசிகர்கள்

இந்த கிச்சனை விட தங்கள் வீட்டின் சமையலறை இன்னும் சுத்தமாக இருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
விராட் கோலி - அனுஷ்கா சர்மா
விராட் கோலி - அனுஷ்கா சர்மாட்விட்டர்

விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் நட்சத்திர தம்பதிகளில் விராட்- அனுஷ்கா ஜோடியும் ஒன்று. அவ்வப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

பல சமயங்களில் ரசிகர்கள், இவர்களது மகள் வாமிகாவின் புகைப்படத்தையும் பகிருமாறும் கேட்டு வந்துள்ளனர்.

ஒரு முறை கிரிக்கெட் போட்டியின்போது மகள் வாமிகாவுடன் அனுஷ்கா இருக்கும் வீடியோ அவர்களது அனுமதியில்லாமல் பகிரப்பட்டதை அடுத்து, இந்த விஷயம் சர்ச்சையானது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டது. இந்த புகைப்படத்தில் கோலி சமையல் அறையில் நின்றுகொண்டு வேலை செய்து வருகிறார். அவரை கட்டியணைத்துகொண்டு அனுஷ்கா நின்றிருந்தார்.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா
Virat Kohli: “இதுதான் சுதந்திரம்” : விராட் வரைந்த ஓவியம் - நெகிழ்ந்த ரசிகர்கள்

இது நெட்டிசன்களிடையே வைரலாக பகிரப்பட்டது. பலரும் இவர்கள் ஜோடியை க்யூட் என கமெண்ட் செய்திருந்தனர். ஆனால் ரசிகர்களை கவர்ந்தது இந்த புகைப்படத்திலிருந்த விராட்டோ, அனுஷ்காவோ அல்ல, அவர்களது வீட்டின் கிச்சன் தான்.

அவர்கள் வீட்டின் சமையலறை இவ்வளவு அசுத்தமாக, ஒழுங்கில்லாமல் இருக்கிறதா என பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். இந்த கிச்சனை விட அவர்கள் வீட்டின் சமையலறை இன்னும் சுத்தமாக இருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர். ஆனால் இந்த கமென்ட்களுக்கு அந்த தம்பதியிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை!

விராட் கோலி - அனுஷ்கா சர்மா
விராட் கோலியை சந்திக்க 23 ஆயிரம் ரூபாய் செலவு செய்த ரசிகர் - யாரு சாமி நீ?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com