பேஸ்புக் மற்றும் யூடியூப் ஆகியவை உலகளவில் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான சமூக ஊடங்களாகும். இதன் வரிசையில் இன்ஸ்டாகிராமும் கிட்டத்தட்ட 1.4 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது.
இளசுகளின் இணையத்தளமாக மாறிய இன்ஸ்டாகிராமில் பயனர்கள், தினமும் குறைந்தது 29 நிமிடங்களாவது செலவிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்ஸ்டாகிராம் தற்போது வணிக ரீதியாகவும் பெரும் வளர்ச்சியை அடைத்து வருகிறது.
பிராண்ட்களை விளம்பரப்படுத்த ஒரு சிறந்த ஊடகமாக மாறியிருக்கிறது. இதற்காகப் பல முன்னணி நிறுவனங்கள் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலங்களைப் பயன்படுத்துகிறது. விளம்பரப்படுத்துவதற்காக ஒரு தொகையை அந்த பிரபலங்கள் பெறுகிறார்கள்.
சமீபத்தில், ஃபோர்ப்ஸ் இந்தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகெங்கிலும் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்களின் பெயர்களை வெளியிட்டது. அவர்களின் பட்டியலைக் காண்போம்...
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் 500 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட உலகின் முதல் நபர் என்ற பெருமையைப் பெறுகிறார் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
ஒரு பதிவுக்கு கிட்டத்தட்ட $2.40 மில்லியன் ( இந்திய மதிப்பில் 19 கோடி) பெறுகிறார்.
இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் நபர்களின் பட்டியலில் 483 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்.
அமெரிக்காவின் பிரபல மாடல் அழகியான கைலி ஜென்னர் 370 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
இவர் ஒரு போஸ்டுக்கு சராசரியாக $1.84 மில்லியன் (ரூ. 15 கோடி) பெற்று டாப் இன்ஃபுளூயன்சர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிறகு, ஒரு பதிவுக்கு சராசரியாக $1.78 மில்லியன் (ரூ. 14.5 கோடி) சாம்பாதிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் அவருக்கு 362 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
அமெரிக்கப் பாடகி, நடிகையான செலினா கோம்ஸ்க்கு இன்ஸ்டாகிராமில் 348 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
ஒரு பதிவுக்கு சராசரியாக $1.74 மில்லியன் ( ரூ. 14 கோடி) சம்பாதித்து அதிக தொகை பெறும் இன்ஃபுளூயன்சர்களின் பட்டியலில் கோமஸ் 4வது இடத்தைப் பெற்றார்.
டுவைன் ஜான்சன் ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் மற்றும் இன்ஸ்டாகிராமில் 338 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐந்தாவது அதிக சம்பளம் பெறும் இன்ஃபுளூயன்சராக உள்ளார்.
ஒரு பதிவுக்கு சராசரியாக $1.71 மில்லியன் பெறுகிறார்.
கிம் கர்தாஷியன் ஒரு அமெரிக்க ஒப்பனையாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 330 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
ஒரு பதிவுக்கு சராசரியாக $1.69 மில்லியன் ( ரூ. 13.7 கோடி) சம்பாதித்து அதிக தொகை பெறும் இன்ஃபுளூயன்சர்களின் பட்டியலில் கிம் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்
பாப் நட்சத்திரமான அரியானா கிராண்டேவை இன்ஸ்டாகிராமில் 332 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
ஒரு பதிவுக்கு சராசரியாக $1.69 மில்லியன் (ரூ. 13.7 கோடி) சம்பாதித்து அதிக தொகை பெறும் இன்ஃபுளூயன்சர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
பியோனஸ் ஒரு அமெரிக்கப் பாடகி, பாடலாசிரியர் மற்றும் நடிகை ஆவார். இவரை இன்ஸ்டாகிராமில் 275 மில்லியன் பேர் பின்தொடர்ந்துள்ளனர். பியோனஸ் இந்த பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
ஒரு பதவிக்கு சராசரியாக $1.39 மில்லியன் (ரூ. 11 கோடி) சம்பாதிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் 273 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட க்ளோ கர்தாஷியன்,அதிக தொகை பெறும் இன்ஃபுளூயன்சர்களின் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்திருக்கிறார்.
அவர் ஒரு பதவிக்கு சராசரியாக $1.32 மில்லியன் ( ரூ. 10.5 கோடி) பெறுகிறார்.
சூப்பர் மாடலான கெண்டல் ஜென்னர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு சராசரியாக $1.29 மில்லியன் (ரூ. 10.5 கோடி) சம்பாதித்து 10வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அவருக்கு 258 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust