பாஸ்போர்ட் பற்றி நீங்கள் அறியாத 11 ஆச்சரியமான உண்மைகள்!

அமெரிக்காவும் இந்தியாவும் "புதிய உலகத்துடன்" தாங்கள் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக தங்களது பாஸ்போர்ட்டை நீல நிறத்தில் கொண்டுள்ளது. பாஸ்போர்ட்களைப் பற்றிய சில ஆச்சரியமான மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம் வாங்க...
Passport
PassportPixabay


பயணம் செய்வது என்பது எப்போதும் அலுக்காத ஒன்று. புதிய மனிதர்கள், புதிய இடங்கள், புதிய அனுபவங்கள் எனப் பயணத்தின் சுவாரஸ்யங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதிலும் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் என வெளிநாட்டுப் பயணங்கள் என்றால், கூடுதல் த்ரிலிங்காக இருக்கும். அப்படி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வோர், பாஸ்போர்ட் விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்று.

ஏனெனில் வெளிநாட்டுப் பயணத்தில் பாஸ்போர்ட்டின் பங்கு மிக முக்கியமானது. பாஸ்போர்ட் இல்லாமல், நீங்கள் எந்த ஒரு நாட்டின் எல்லைக்குள்ளும் அடியெடுத்து வைத்துவிட முடியாது.

பாஸ்போர்ட் கையிலிருந்தால்தான் நீங்கள் ஒரு நாட்டிற்குள் சுதந்திரமாகச் சுற்றி வர முடியும்; புதிய அனுபவங்களைப் பெற முடியும். சாகசங்களை அனுபவிக்க முடியும். அதே சமயம் பாஸ்போர்ட் வழங்குவதன் அடிப்படை நோக்கமே, ஒரு நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர், எங்கிருந்து வருகிறார், எங்குச் சென்றார், எங்குச் செல்கிறார் போன்ற விஷயங்களைக் காட்டுவதற்காகத்தான்.

இவ்வளவு விஷயங்கள் இருப்பதால்தான், பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு நாட்டுக்குள் ஒருவர் வந்தால், அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். இதில் அகதிகளாக வருபவர்கள் கூட, முதலில் இந்த பாஸ்போர்ட் சட்டத்தின்படி தான் முதலில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, விசாரிக்கப்படுகிறார்கள். அதன் பின்னரே, மனிதாபிமான அடிப்படையில், அவர்களுக்குக் குறிப்பிட்ட இடத்தில் தங்க, புகலிடம் அளிக்கப்படுகிறது.

இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாஸ்போர்ட்களைப் பற்றிய சில ஆச்சரியமான மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்க்கலாம் வாங்க...

Passport
PassportPixabay

'பாஸ்போர்ட்' என்ற வார்த்தை முதலில் பைபிளில் குறிப்பிடப்பட்டதா?

'பாஸ்போர்ட்' என்பது, உலகில் மிக நீண்ட காலமாகப் புழக்கத்தில் உள்ளது. உண்மையில், இது பைபிளில் உள்ள பழமையான குறிப்புகளில் ஒன்றாகும். இது, ஜெருசேலத்தை மீண்டும் கட்டியெழுப்பிய நெகேமியாவின் பழைய ஏற்பாட்டின் புத்தகத்தில் உள்ளது. கி.மு. 450 -ல், பாரசீகப் பேரரசின் ஆறாவது மன்னரான அர்டாக்செர்க்ஸஸ் I - ன் அரசவை அதிகாரியான நெகேமியா, நதிக்கு அப்பால் உள்ள மாகாணத்தின் ஆளுநர்களுக்கு" ஒரு அரச ஆவணம் மூலம் யூதேயாவிற்கு வர அனுமதி வழங்கினார். இதுதான் இன்றைய பாஸ்போர்ட் முறைக்கான தொடக்கமாக அமைந்தது.

"பாஸ்போர்ட்" என்ற வார்த்தையின் தோற்றம் 15 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது:

பாஸ்போர்ட் குறித்த பழமையான குறிப்பு பைபிளில் காணப்பட்டால், அது பிரெஞ்சு வார்த்தைகளான ‘passer’ + ‘port’ ஆகிய 2 வார்த்தைகளின் மூலமாகப் பெறப்பட்டதாகத்தான் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதன் அர்த்தம், "ஒரு துறைமுகத்தின் வழியாகக் கடந்து செல்வது" என்பதாகும். 15 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படும் இந்த வார்த்தை "பாஸ்போர்ட்" என்ற கூட்டு வார்த்தையாகவும் அப்போது எழுதப்பட்டது. சரக்குகள் கொண்டு செல்லப்படுவதை அங்கீகரிக்க முதலில் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தை, பின்னர் 15 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து மக்கள் செல்வதற்காகவும் பயன்படுத்தப்படத் தொடங்கியது. எவ்வாறாயினும், "துறைமுகம்" என்ற சொல் துறைமுகங்களை மட்டுமே அல்லாமல், நகரங்களின் கோட்டை வாயில்களைக் குறிக்கிறதா என்பது குறித்து இதுவரை எதுவும் உறுதியாகத் தெரிவிக்கப்படவில்லை.

உங்கள் முகத்தில் பச்சை குத்தப்பட்டிருந்தாலோ அல்லது முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலோ, உங்களுக்கு புதிய பாஸ்போர்ட் தேவைப்படும். இது உங்கள் தோற்றத்தில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், நீங்கள் உங்கள் புகைப்படத்தை மாற்ற வேண்டும். உங்கள் பாஸ்போர்ட்டைப் பெறும்போது, முகத்தின் புகைப்பட பகுதி வெற்றிடமாக இருந்தாலோ அல்லது பாஸ்போர்ட் பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் முகத்தில் மேற்கூறிய மாற்றம் செய்யப்பட்டிருந்தாலோ இதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.

Passport
PassportTwitter

உங்கள் பாஸ்போர்ட் புகைப்படம், சீருடை அணிந்தோ, முகம் அல்லது தலையை மறைத்தோ இருக்கக் கூடாது:

உங்கள் பாஸ்போர்ட் புகைப்படத்தை எந்த சீருடை அணிந்தும் எடுக்க முடியாது. தொப்பிகள், குல்லா மற்றும் கருப்பு கண்ணாடிகள் கூட அனுமதிக்கப்படாது. இன்னும் சொல்லப்போனால், உங்கள் தலைமுடி உங்கள் முகத்தை மறைத்திருந்தால், நீங்கள் மீண்டும் புகைப்படம் எடுக்க வேண்டும். விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் போன்ற வணிக ஊழியர்களுக்கு மட்டுமே விதி விலக்கு இருக்கும்.

உங்கள் பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே புதுப்பிக்கவும்:

பயணத்தை மேற்கொள்வதற்கு முன் உங்கள் பாஸ்போர்ட்டின் காலாவதி தேதியைப் பார்த்துக் கொள்ளவும். சில நாடுகளில், அங்கு நுழைந்த பின்னர், உங்கள் பாஸ்போர்ட் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஆனால் பாதுகாப்பு கருதி, 6 மாதங்களாவது செல்லுபடியாகும் உத்தரவாதத்தை நீங்கள் அளிக்க வேண்டும்.

Passport
PassportPixabay

பாஸ்போர்ட் பற்றிய உலக அளவிலான சுவாரஸ்யமான உண்மைகள்:

"உலகக் குடியுரிமை", "உலகச் சட்டம்" மற்றும் உலக அரசாங்கத்தைப் பற்றிக் கற்பிக்கும் வாஷிங்டனைச் சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான World Service Authority ஆல் வழங்கப்படும் பாஸ்போர்ட் மூலம், உலக பாஸ்போர்ட்டைப் பெறுவது சாத்தியமாகும். புர்கினா பாசோ, ஈக்வடார், மொரிட்டானியா, தான்சானியா, டோகோ மற்றும் ஜாம்பியா உள்ளிட்ட உலகின் மிகச் சில நாடுகளால் இவை பயண ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

13 ஆம் நூற்றாண்டிலிருந்து பாஸ்போர்ட் பயன்பாட்டில் உள்ளது:

13 ஆம் நூற்றாண்டிலிருந்து பாஸ்போர்ட் பயன்பாட்டில் உள்ளது. கிங் ஹென்றி V வெளிநாட்டு நாடுகளுக்கு பயணம் செய்யும் போது, தனது குடியுரிமை மற்றும் அடையாளத்தை எளிதாக நிரூபிக்க இந்த கருத்துருவை அறிமுகப்படுத்தினார். ஆனால், அப்போது அதற்கு ‘பாஸ்போர்ட்’ என்ற பெயர் வழங்கப்படவில்லை.

Passport
பிஜு பட்நாயக் : பிரதமரைக் காப்பாற்றிய ஒரு முதல்வரின் விமான சாகசம் - அறியாத வரலாறு

பாஸ்போர்ட்டின் வெவ்வேறு நிறங்களுக்கு என்ன அர்த்தம்?

ஒவ்வொரு நாடுகளின் பாஸ்போர்ட்டும் சிவப்பு, நீலம், பச்சை அல்லது கருப்பு என வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். பாஸ்போர்ட்டுகள் இந்த 4 நிறங்களை அடிப்படையாகக் கொண்டே, வெவ்வேறு விதமாகக் காணப்படும். ஐரோப்பாவில், 1980களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை பிரான்ஸ் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான பர்கண்டி பின்பற்றுகிறது. ஆனால் சில நாடுகள் கம்யூனிசத்தைக் குறிக்கும் வகையில் சிவப்பு நிறத்தையும் தேர்ந்தெடுத்துள்ளன. அமெரிக்காவும் இந்தியாவும் "புதிய உலகத்துடன்" தாங்கள் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் அடையாளமாக தங்களது பாஸ்போர்ட்டை நீல நிறத்தில் கொண்டுள்ளது. கலாச்சார ரீதியாக முஸ்லிம் மதத்துடன் தொடர்புடைய பச்சை நிறம், வடமேற்கு ஆப்பிரிக்காவின் மக்ரெப் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பாஸ்போர்ட் நிறமாக உள்ளது. கருமை நிறம் ஆப்பிரிக்கக் கண்டத்தைக் குறிக்கும் வகையில், பல சஹாரா ஆப்பிரிக்க நாடுகளின் பாஸ்போர்ட்களில் காணப்படுகிறது. அதே சமயம், நியூசிலாந்து நாட்டின் தேசிய நிறமாகவும் இருப்பதால், அதன் பாஸ்போர்ட்டின் நிறமும் கருமையாகவே காணப்படுகிறது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், பிரிட்டனின் பாஸ்போர்ட் 'ரெட் புக்' என்றும், அமெரிக்க பாஸ்போர்ட் 'புளூ புக்' என்ற பட்டப்பெயரில் குறிப்பிடப்படுகிறது.

Passport
உக்ரைன் ரஷ்யா : பிரமாண்ட கப்பலை தாக்கியதா Ukraine? கோபமான Russia - தீவிரமடையும் போர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com