Ukraine : போருக்கு இடையில் 1000 கி மீ பயணம் செய்த சிறுவன் "The Biggest Hero of Last night"

வெற்றிகரமாகத் தனது பயணத்தை முடித்துக்கொண்ட அந்த சிறுவனைப் புகழ்ந்த ஸ்லோவாக்கியா அரசு “சென்ற இரவின் மிகப் பெரிய ஹீரோ ” "The Biggest Hero of Last night" எனப் பாராட்டியுள்ளனர்.
Ukraine Boy

Ukraine Boy

Twitter

Published on

உக்ரைன் ரஷ்ய தாக்குதல் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைன் முழுவதும் பலத்த சேதமடைந்திருந்தாலும் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. உக்ரைன் பொது மக்கள் வாழும் பகுதிகளிலும் ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கிடையில் உக்ரைனைச் சேர்ந்த ஒரு 11 வயது சிறுவன் 1000 கிலோ மீட்டர் பயணம் செய்து உக்ரைனிலிருந்து ஸ்லோவாக்கியா சென்றுள்ளார்.

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அனுமின் நிலையம் இருக்கும் ஜபோரிஜியா தான் அந்த சிறுவனின் நகரம். இரு நாடுகளுக்கு இடையிலான போரினால் அந்த அணுமின் நிலையம் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. அப்படி வெடித்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு மிகக் கொடுமையானதாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த சூழலில் தான் அந்த 11 வயது சிறுவனின் பெற்றோர் அவனை ஸ்லோவாக்கியாவில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். வயதான தாய், தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியதனால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியவில்லை.

Ukraine Boy

Ukraine Rusia War : தீப்பிடித்து எரியும் அணுமின் நிலையம் - என்ன நடக்கிறது உக்ரைனில் ?

Phone Number

Phone Number

Facebook

வெற்றிகரமாகத் தனது பயணத்தை முடித்துக்கொண்ட அந்த சிறுவனைப் புகழ்ந்த ஸ்லோவாக்கியா அரசு “சென்ற இரவின் மிகப் பெரிய ஹீரோ ” "The Biggest Hero of Last night" எனப் பாராட்டியுள்ளனர்.

ஒரு பிளாஸ்டிக் பை, பாஸ்போர்ட், காகிதத்தில் மடிக்கப்பட்ட அவரது தாயின் குறிப்பு மற்றும் கையில் தாயின் தொலைப்பேசி எண்ணை எழுதிக்கொண்டு அந்த சிறுவன் ஸ்லோவாக்கியாவுக்கு ரயிலில் புறப்பட்டுள்ளார். ஸ்லோவாக்கியா எல்லையில் தனியாக வந்த சிறுவனைக் கண்ட அதிகாரிகள் தலை நகரில் இருக்கும் அவரது உறவினரை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டனர்.

Ukraine Boy

Ukraine Boy

Facebook

ஸ்லோவாக்கிய அரசு மற்றும் காவல்துறை அந்த சிறுவனைப் பார்த்துக்கொண்டமைக்காக நன்றி கூறுவதாக அந்த மடிக்கப்பட்ட குறிப்பில் சிறுவனின் தாய் எழுதியுள்ளார்.

அந்த சிறுவனை மிகுந்த மன உறுதி உடையவன், பயமற்றவன் என ஸ்லோவாக்கியா உள்துறை அமைச்சகம் முகநூல் பதிவில் பாராட்டியுள்ளது.

Ukraine Boy

Ukraine Russia War : இந்திய அமைச்சரை திட்டிய ருமேனியா மேயர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

தன்னார்வலர்கள் அந்த சிறுவனை நன்றாகக் கவனித்துக்கொள்கின்றனர். அவனுக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவனது அடுத்த பயணத்திற்காக அவனைத் தயார் செய்கின்றனர். என்று ஸ்லோவாக்கியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com