கூகுள், சோனி, நைக், பெப்சி கோலா போன்ற முன்னணி பிராண்டுகள் ஆரம்பத்தில் வேறு ஒரு பெயரில் தொடங்கப்பட்டு தற்போது வேறு பெயரில் மக்கள் மத்தியில் அறியப்பட்டு வருகின்றன.
ஒரு நிறுவனத்தின் எந்தவொரு பிரண்டும் மக்கள் மத்தியில் அறியப்படப் பல வருடங்கள் கடின உழைப்பும் தொலைநோக்கு பார்வையும் தேவைப்படுகிறது.
வாடிக்கையாளர்களை தங்கள் பிராண்டு அல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள், சேவைகளை அதிக அளவில் நுகர வைக்கவும், அந்த பிராண்டை நிலை நிறுத்தவும் நிறுவனங்கள் போராடி வருகின்றன.
அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் பிராண்ட்களின் பெயர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது. அந்த மாற்றப்பட்ட பிரபல பிராண்ட்களின் பெயர்கள் இதோ!
இணைய யுகத்தின் மிகப் பெரிய பரிசாக கூகுள் மக்கள் மத்தியில் அறியப்படுகிறது.
கேள்விகளுக்குப் பதிலளிப்பது முதல் அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு உதவுவது வரை அனைத்தையும் Google செய்து வருகிறது.
கூகுள் உலகளவில் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த கூகுள் ஆரம்பத்தில் BackRub என்று அழைக்கப்பட்டது.
1998 ஆம் ஆண்டில் பேஜ் மற்றும் பிரின் ஆகியோர் தங்கள் நிறுவனத்துக்கு கூகோல் என்ற கணிதச் சொல்லில் பெயரை மாற்றினர்.
1976 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் , ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோரால் நிறுவப்பட்டு உலகின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ்.
ஆரம்பத்தில், இந்த பிராண்ட் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று அறியப்பட்டது, ஆனால் 2007 ஆம் ஆண்டில் அதன் பெயர் Apple, Inc. என மாற்றப்பட்டது.
1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிளாக்பெர்ரி லிமிடெட் முதலில் ரிசர்ச் இன் மோஷன் (RIM) என்று அறியப்பட்டது. 2013 இல் நிறுவனம் தனது பெயரை பிளாக்பெர்ரி என மாற்றுவதாக அறிவித்தது.
"ரிசர்ச் இன் மோஷனில் இருந்து பிளாக்பெர்ரிக்கு மாற்றப்பட்டது, நிறுவனத்திற்கு ஒரு சிறந்த வரையறுக்கப்பட்ட தருணம்” என்று அந்த நேரத்தில் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தோர்ஸ்டன் ஹெய்ன்ஸ் கூறினார்.
1890 களின் முற்பகுதியில் காலேப் பிராதாம் என்பவரால் பெப்சி- கோலா உருவாக்கப்பட்டது .
முதலில் "பிராட் ட்ரின்க்" என்று பெயரிடப்பட்டது, அதன் பின்னர் 1898 இல் பெப்சி-கோலா என்று பெயர் மாற்றப்பட்டது, 1961 இல் பெப்சி என்று சுருக்கப்பட்டது.
1946 ஆம் ஆண்டில் இபுகா-சான் மற்றும் மொரிடா-சான் ஆகியோரால் நிறுவப்பட்டது தான் இந்த டோக்கியோ சுஷின் கோக்யோ.
இதன் பெயரை மக்கள் உச்சரிக்க சிரமப்பட்டதால், 1958 இல் டோக்கியோ சுஷின் கோக்யோ என்ற பெயரை சோனி என மாற்றியது அந்த நிறுவனம்.
ஸ்டார்பக்ஸ் முதலில் கார்கோ ஹவுஸ் என்று அறியப்பட்டது.
ஸ்டார்பக்ஸ் காபி என்ற பெயர், ஆரம்பகால காபி வியாபாரிகளின் கடல்வழிப் பாரம்பரியத்தைத் தூண்டும் "மொபி-டிக்" கதையால் ஈர்க்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு பில் போவர்மேன் மற்றும் பில் நைட் ஆகியோரால் ப்ளூ ரிப்பன் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் நிறுவப்பட்டது.
பின்னர் இந்த நிறுவனம் 971 இல் அதிகாரப்பூர்வமாக Nike, Inc. என பெயர் மாற்றப்பட்டது.
Firefox முதலில் Phoenix என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின்னர் Firebird என மாற்றப்பட்டது.
பின்னர் Mozilla Foundation அதன் பெயரை Firebird என்பதிலிருந்து Firefox என்று மாற்றியது.
1998 இல் கான்ஃபினிட்டி என நிறுவப்பட்டது, அந்த நேரத்தில் மொபைல் சாதனங்களுக்கான பாதுகாப்பு மென்பொருளை வழங்கிய இந்த நிறுவனம்.
ஆனால் சரியான ரீச் கிடைக்கவில்லை, இதனால் அந்த நிறுவனத்தின் நிறுவனர் டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான பிரத்யேக தளமாக அறிமுகப்படுத்தினார். 2001 இல் PayPal என மறுபெயரிடப்பட்டது.
அமெரிக்காவின் ஸ்டார்ன்ஃபோர்டு பல்கலைக் கழகப் பட்டதாரிகளான டேவிட் பிலோ, ஜெரி ஜாங் என்பவர்களால் “ யாஹூ” 1994 இல் ஆரம்பிக்கப்பட்டது.
1994 இல், யாஹூ தொடக்கத்தில் ஜெர்ரி'ஸ் கைடு டு தி வொர்ல்ட் வைட் வெப் என்று அறியப்பட்டது. நிறுவனம் 1996 ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust