நேபாளம் விமான விபத்து: இதுவரை 14 பேர் உயிரிழப்பு - மீட்பு பணிகள் தீவிரம்

நேற்று ஏற்பட்ட நேபாளம் விமான விபத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், இதுவரை 14 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Nepal Plane crash
Nepal Plane crashTwitter
Published on

நேபாளத்தில் மஸ்டங் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகிய விமானத்தில் பயணித்த 22 பேரில், இதுவரை 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவு உடல்கள் சிதைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்.

நேற்று காலை போகாராவிலிருந்து தாரா ஏர் என்ற விமானம் 22 பயணிகளுடன் புறப்பட்ட நிலையில், சில நிமிடங்களிலேயே மாயமானது. 4 இந்தியர்கள், 2 ஜெர்மனி நாட்டவர்கள் மற்றும் 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமானிகள் உட்பட 22 பேருடன் விமானம் புறப்பட்டது.

Rescue team
Rescue teamTwitter

தேடுதல் பணியில் இறங்கிய நேபாள ராணுவம் விமானிகளின் செல் ஃபோன் சிக்னல்கள், மற்றும் விமானத்தின் சிக்னலை வைத்து விபத்து ஏற்பட்ட பகுதியைக் கண்டுபிடித்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.

இதுவரை 14 பேரி உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகள் இன்னும் தீவிரமடைந்து வருகின்றன. 15 பேர் கொண்ட ராணுவக்குழு மீட்புப் பணியில் ஈட்டுப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட பகுதி 14,500 அடி உயரத்தில் உள்ளதால், மீட்புக்குழுவை கிட்டதட்ட 11 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இறக்கி தேடுதல் பணிகள் துவங்கப்பட்டன

Tara Air Plane
Tara Air PlaneTwitter

நேபாளத்தின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், இந்த விபத்தில் பயணிகள் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், அதிகாரப்பூர்வமாக விபத்துப் பகுதியிலிருந்து தகவல்கள் கிடைத்தால் தான் எந்த முடிவுக்கும் வர இயலும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தேக் ராஜ் சிதாவுலா, திரிபுவன சர்வதேச விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கண்டுபிடிக்கப்பட்ட உடல்களில் பலவும் அடையாளம் தெரிந்துகொள்ள முடியாத அளவு சிதைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Nepal Plane crash
22 பேருடன் மாயமான நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com