Bobi : உலகின் மிக வயதான நாய் குறித்து தெரியுமா?

பாபி என்ற அந்த நாய் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தது. பிப்ரவரி 4, 2023னுடன் அந்த நாய்க்கு 30 ஆண்டுகள் 229 நாட்கள் வயதாகிறது. இதுவரை எந்த நாயும் இத்தனை காலம் வாழ்ந்ததில்லை என்கிறது கின்னஸ்.
Bobi : உலகின் மிக வயதான நாய் குறித்து தெரியுமா?வ்
Bobi : உலகின் மிக வயதான நாய் குறித்து தெரியுமா?வ்Twitter
Published on

சராசரியாக ஒரு நாய் 10 முதல் 15 வயது வரை வாழும். ஆனால் அசாதாரணமாக 30 வருடங்கள் உயிருடன் வாழ்ந்து சாதனைப்படைத்துள்ளது ஒரு நாய்.

இதுவரை உலகில் வாழ்ந்த நாய்களிலேயே இது தான் மிக வயதானது எனக் கருதுகின்றனர். இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழும் இந்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இருந்த சாதனைகளை முறியடித்துள்ளதாக அந்த நாய்க்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

பாபி என்ற அந்த நாய் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தது. பிப்ரவரி 4, 2023னுடன் அந்த நாய்க்கு 30 ஆண்டுகள் 229 நாட்கள் வயதாகிறது.

பாபிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ப்லோயி என்ற நாய் இந்த சாதனையைப் படைத்திருந்தது. இதன் வயது 30 ஆண்டுகள் 5 மாதம்.

பாபி கோஸ்தா குடும்பத்தில் பிறக்கும் போது அதன் உரிமையாளரான லியோனல் கோஸ்தாவுக்கு 8 வயதாம்.

"அப்போது எங்கள் வீட்டில் நிறைய நாய்கள் இருந்ததால் பாபியுடன் பிறந்த குட்டிகளை நாங்கள் வெளியே விட்டுவிட்டோம். எப்படியோ பாபி தப்பி பிழைத்தது" என பாபியின் குழந்தைப் பருவத்தை அவர் நினைவுகூறுகிறார்.

Bobi : உலகின் மிக வயதான நாய் குறித்து தெரியுமா?வ்
நாய் வளர்க்குறீங்களா? இந்த 10 விஷயத்தைக் கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க

"வீட்டுக்கு வந்த பாபியை நானும் என் அண்ணனும் ரகசியமாக வளர்த்தோம். சில நாட்களுக்குப் பின் கண்டுபிடித்த எங்கள் பெற்றோரும் அதனை வளர்க்க சம்மதித்தனர்" என பிபிசியிடம் கூறியுள்ளார் லியோனல்.

இப்போது வயது முதிர்வு காரணமாக பார்வைக் குறைபாடு மற்றும் நடப்பதற்கு சிரமப்படும் பாபி ஆரோக்கியமாக இருப்பதாகவே மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாபி ரஃபீரோ டோ அலென்டெஜோ Rafeiro do Alentejo என்ற வகையைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bobi : உலகின் மிக வயதான நாய் குறித்து தெரியுமா?வ்
காட்டுக்குள் தொலைந்து போன உரிமையாளர்; மீட்க உதவிய வளர்ப்பு நாய் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com