நீளமான மீசை முதல் வலிமையான நாக்கு வரை - 5 வினோத கின்னஸ் சாதனைகள்

இப்படியெல்லாம் கூடவா சாதனை செய்வார்கள் என நம்மை யோசிக்க வைக்கும் வகையிலான சற்றே வித்தியாசமான கின்னஸ் சாதனைகளை இங்கே காணலாம்
Guinness World Records
Guinness World RecordsTwitter
Published on

கின்னஸ் சாதனை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! மனிதர்களால் நிகழ்த்தப்படும் அசாத்திய சாதனைகளைப் பட்டியலிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது கின்னஸ் அமைப்பு

மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பல சாதனைகள் இவ்வுலகில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

அதிலும் சிலர் விநோதமான அல்லது வித்தியாசமாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.இப்படியெல்லாம் கூடவா சாதனை செய்வார்கள் என நம்மை யோசிக்க வைக்கும் வகையிலான சற்றே வித்தியாசமான கின்னஸ் சாதனைகளை இங்கே காணலாம்

1.உலகின் மிக நீளமான மீசை

இந்தியாவின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராம் சிங் சவுகான், 14 அடி நீளமான மீசையை வைத்துள்ளார்.

2010 இல் இத்தாலியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "லோ ஷோ டீ ரெக்கார்ட்" தொகுப்பில், அவரது முக முடி அளவிடப்பட்டது. 37 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் மீசை முடியை வெட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. உலகிலேயே நீளமான நாக்கு

கலிபோர்னியாவைச் சேர்ந்த நிக் ஸ்ட்ரோபெர்ல் என்பவரின் நாக்கு உலகிலேயே மிக நீண்டது. அவரின் நாக்கின் அளவு 10.10 சென்டிமீட்டராக உள்ளது.

Guinness World Records
ஆழ்கடலில் ஆபத்தான பயணம், உலக சாதனை படைத்த 4 பெண்கள் - குவியும் பாராட்டுகள்

3.உடலில் 50 உலோக ஸ்பூன்

எட்டிபர் எல்செவ் (Etibar Elchyev ) என்பவர் எந்தவொரு பசையையும் பயன்படுத்தாமல் தனது உடலில் 50 உலோக ஸ்பூன்களை அப்படியே தொங்கவிடுகிறார். இதன் மூலம் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

4.மின் விசிறியை நாக்கால் நிறுத்தி சாதனை

ஜோ எல்லிஸ் என்பவர் மின் விசிறியைத் தனது நாக்கால் நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளார்.

Guinness World Records
காவல்துறை : உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு இந்திய மாநிலம் - என்ன சாதித்து?

5.ராமோஸ் கோம்ஸ் குடும்பம்

2000 ஆம் ஆண்டில் மிகப்பெரிய முடியைக் கொண்ட குடும்பத்திற்கான உலக சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

நீங்கள் இப்படி கேள்விப்பட்ட அல்லது பார்த்த வித்தியாசமான சாதனைகள் எதேனும் உண்டா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com