இந்த இடங்களுக்கு சென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லையா? - உலகின் மர்மமான 4 இடங்கள்!

பயணிகள் யாரும் அனுமதிக்கப்படாத ஒரு சில மர்மமான இடங்களும் இந்த உலகத்தில் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு செல்லும் நபர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அப்படி ஆபத்துகள் நிறைந்த இடங்களை இப்பதிவில் பார்க்கலாம்
சென்டினல் தீவு (வானிலிருந்து)
சென்டினல் தீவு (வானிலிருந்து)Twitter

உலகில் உள்ள சில குறிப்பிட்ட அழகழகான இடங்கள் மக்களின் கண்களைக் ஈர்க்கக் கூடிய வகையில் இருக்கிறது. இந்த இடங்கள் அனைத்தும் மக்கள் அணுகக்கூடிய சுற்றுலாத் தளமாக செயல்பட்டு வருகிறது.

ஆனால், பயணிகள் யாரும் அனுமதிக்கப்படாத ஒரு சில மர்மமான இடங்களும் இந்த உலகத்தில் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு செல்லும் நபர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. அப்படி ஆபத்துகள் நிறைந்த இடங்களை இப்பதிவில் பார்க்கலாம்

பிரேசிலின் பாம்பு தீவு

அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கும் என்று சொல்வார்கள். அதே போல பார்ப்பதற்கு வசீகரிக்கக்கூடிய அழகுடன் மிளிரும் பிரேசிலின் தீவு ஒன்று அதிக ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது.

பாம்புகளுக்கான உறைவிடமாக இருக்கும் இந்த தீவில் பார்வையாளர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இந்த தீவு பாம்புகளுக்கு மட்டும் இல்ல விஷத்தன்மை உள்ள சிலந்திகளுக்கும் பிரபலம் தான்.

கோகோ கோலா வால்ட்

பொதுவாக, ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கென தனிப்பட்ட ரகசியத்தை வைத்திருக்கும். அதை யாருக்கும் தெரியாமல் பெட்டகத்திற்குள் வைத்து பாதுகாக்கும். அந்த வகையில், பிரபல குளிர்பான நிறுவனமான கோகோ கோலா அதன் தயாரிப்பு ரகசியங்களை ஒரு பெட்டகத்திற்குள் வைத்து பாதுகாக்கிறதாம்.

அதாவது, கோகோ கோலா நிறுவனத்தின் வால்ட் ரகசிய அறைக்குள் குளிர்பான தயாரிப்பு முறைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டகத்திற்குள் யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

சென்டினல் தீவு (வானிலிருந்து)
மதுகிரி : ஆசியாவின் மிக பெரிய ஒற்றைக்கல் பாறை - சென்னையில் இருந்து எவ்வளவு தூரம் தெரியுமா?
 Area 51
Area 51Twitter

அமெரிக்காவின் ஏரியா 51

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தங்களுடைய பாதுகாப்புக்கென பல கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறது. அதனால், அமெரிக்காவில் உள்ள அனைத்து இடங்களையும் ஒரு பார்வையாளராக நம்மால் எளிதில் அணுக முடியாது.

அப்படி, அமெரிக்காவில் உள்ள ஏரியா 51 என்ற இடம் மிக ரகசியமாக பாதுகாக்கப்படுகிறதாம். இந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே அறிந்திருக்கிறார்கள். ஏரியா 51 இன் இரகசிய நடவடிக்கைகள் பற்றி கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் அது வேற்றுகிரகவாசிகளின் தளமாக இருக்கலாம் என்ற சந்தேகங்களும் இருக்கிறது.

சென்டினல் தீவு
சென்டினல் தீவுTwitter

அந்தமானின் சென்டினல் தீவு

இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரே தீவு சென்டினல். இந்த தீவில் வசிக்கும் பழங்குடியின மக்கள் எந்தவொரு வெளி உலகின் தொடர்பும் இல்லாதவர்கள்.

தங்களுக்கென தனி உலகத்தை அமைத்து அதற்குள் வாழும் இவர்கள் வெளி ஆட்களை உள்ளே அனுமதிப்பதில்லை. அப்படி இவர்களது கட்டுப்பாடுகளை மீறி தீவுக்குள் செல்ல முயற்சிக்கும் நபர்கள் உயிருடன் திரும்பியதும் இல்லை.

சென்டினல் தீவு (வானிலிருந்து)
ஹலோ நான் பேய் பேசுறேன்! இந்தியாவின் இந்த அமானுஷ்ய இடங்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com