5000 ஆண்டுகள் பழமையான ஒயின் கல்லறையில் கண்டுபிடிப்பு - எங்கே?

பாலைவன கல்லறை வளாகம் போல காட்சியளிக்கும் இந்த இடம் 41 அரண்மனை ஊழியர்களின் கல்லறைகளை உள்ளடக்கியது. சுடப்படாத மண் செங்கற்கள், களிமண் மற்றும் மரத்தால் கட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
5000-year-old wine discovered in ancient Egyptian queen's tomb
5000-year-old wine discovered in ancient Egyptian queen's tomb Twitter
Published on

வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டியானா கோஹ்லர் தலைமையிலான குழு, அபிடோஸில் உள்ள ராணி மெரெட்-நீத்தின் கல்லறையை அகழ்வாராய்ச்சி செய்தது.

அப்போது பெரிய பாட்டில்களில் ஒயின் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட முத்திரையிடப்பட்ட ஒயின் ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில் "ஒயின் திரவமாக இல்லை, எந்த நிறத்தில் இருக்கிறது என்பதையும் எங்களால் சொல்ல முடியாது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே முழுமையான விவரங்கள் தெரிய வரும்.

ஆனால் இந்த ஒயின் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது மட்டும் உறுதியாக கூற முடியும்’’ என தெரிவித்துள்ளனர்.

எகிப்தின் அபிடோஸில் உள்ள முதல் அரச கல்லறையில் தனது சொந்த நினைவுச்சின்ன கல்லறையை வைத்திருந்த ஒரே பெண் ராணி Meret-Neith மட்டுமே.

5000-year-old wine discovered in ancient Egyptian queen's tomb
இந்தியா தான் டைனோசருக்கு தாயகமா? உலகின் பழமையான டைனோசர் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு!

அவர் அந்த காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த பெண்ணாக இருந்திருக்கலாம் எனவும் 18 வது வம்சத்தின் ராணி ஹட்ஷெப்சுட்டுக்கு முந்தைய பண்டைய எகிப்தின் பெண் பாரோவாக ( ராணியாக ) அவர் இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்.

பாலைவன கல்லறை வளாகம் போல காட்சியளிக்கும் இந்த இடம் 41 அரண்மனை ஊழியர்களின் கல்லறைகளை உள்ளடக்கியது. சுடப்படாத மண் செங்கற்கள், களிமண் மற்றும் மரத்தால் கட்டப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

5000-year-old wine discovered in ancient Egyptian queen's tomb
350 ஆண்டுகள் பழமையான 400 முகலாயர் கால நாணயங்கள் கண்டுபிடிப்பு - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com