Vietnam : வியக்க வைக்கும் வியட்நாம் - 8 அற்புத தலங்கள்!

வியட்நாம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பச்சை பசேலென்ற காடுகள், நீலம் விரிந்துகிடக்கும் கடல், செங்குத்து மலைகள் அடுக்கடுக்கான நீர்வீழ்ச்சிகள், பிரம்மாண்டமான சின்னங்கள் என வாழ்வை நிறைவானதாக்கும் விஷயங்களால் வியக்க வைக்கிறது வியட்நாம் நாடு.
வியட்நாம் : தங்க கைகள் முதல் சுண்ணாம்பு கோபுரங்கள் வரை - வியக்க வைக்கும் தகவல்கள்!
வியட்நாம் : தங்க கைகள் முதல் சுண்ணாம்பு கோபுரங்கள் வரை - வியக்க வைக்கும் தகவல்கள்! Twitter
Published on

வியட்நாம் ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். ஆசிய நாடுகளிலேயே அழகான நாடாக திகழ்கிறது இது.

வியட்நாம் என்றாலே கம்யூனிசம், போர்கள் என பல விஷயங்கள் நம் நினைவுக்கு வந்து செல்லும்.

ஆனால் கடற்கரைகள், ஆறுகள், புத்த பகோடாக்கள் மற்றும் பரபரப்பான நகரங்கள் என அங்கு ரசிக்க எக்கச்சக்க விஷயங்கள் இருக்கின்றன.

வியட்நாம் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பச்சை பசேலென்ற காடுகள், நீலம் விரிந்துகிடக்கும் கடல், செங்குத்து மலைகள் அடுக்கடுக்கான நீர்வீழ்ச்சிகள், பிரம்மாண்டமான சின்னங்கள் என வாழ்வை நிறைவானதாக்கும் விஷயங்களால் வியக்க வைக்கிறது வியட்நாம் நாடு.

வியட்நாம் சென்றால் பார்வையிட மறக்கக் கூடாத 10 இடங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Halong Bay - ஹலாங் பே

செங்குத்தான இயற்கைக் கோபுரங்கள் கடல் பரப்பில் எழுந்து நின்று நம் கண்களுக்கு நம்ப முடியாத காட்சியைக் கொடுக்கும்.

வியட்நாம் செல்லும் அனைவரின் பட்டியலிலும் இந்த இடம் நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.

இந்த பெரிய பரந்த கடற்கரையும் கொஞ்சம் கூட்டமானதாக தெரியும்.

இங்கிருந்து கொஞ்ச தூரத்திலேயே Bai Tu Long Bay இருக்கிறது. இங்குள்ள கோபுரங்கள் கொஞ்சம் உயரம் குறைவு என்றாலும் ஹலாங் பே போலவே இருக்கும்.

மேலும் இங்கு தனிமையான குகைகளையும் பார்வையிடலாம்.

Cát Bà Island

இது மிகவும் நீளமான பசுமையான தீவு.

இங்குள்ள மலைகளில் மலையேற்றம் செய்வது சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.

மலைக்காடுகள் வழியாக த்ரில் பயணத்தை விரும்புபவர்கள் நிச்சயமாக இங்கு பார்வையிட வேண்டும்.

Phong Nha National Park - உலகின் மிகப் பெரிய குகை

வியட்நாம் நாட்டின் நடுப்பகுதியில் இருக்கும் Quang Binh மாகாணம் காடுகளால் சூழப்பட்டது.

இங்கு நூற்றுக்கணக்கான ஆழமான குகைகள் இருக்கின்றன.

முக்கியமாக உலகின் மிகப் பெரிய குகையான ஹாங் சன் டூங் இருக்கிறது. இந்த குகைக்குள் மிகப் பெரிய கட்டடத்தைக் கூட வைத்துக்கொள்ள முடியும்.

பூமிக்கு அடியில் இருக்கும் குகைகளுக்கு சாகச பயணம் மேற்கொள்ளவும் சிகரங்களுக்கு மலையேற்றம் செல்லவும் இந்த இடம் சிறந்தது.

Cat Tien National Park

தங்க கன்னங்கள் இருக்கும் கிபன்ஸ் குரங்குகள், சில்வர் லாங்குவார் குரங்குகள் (langur), சூரிய கரடிகள் மற்றும் தேவாங்குகள் என அறிய வகை உயிரினங்கள் இங்க் இருக்கின்றன.

Hue

வியட்நாம் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் இடங்களில் ஒன்று ஹியூ.

இந்த இடம் நறுமண திரவியம் போன்ற வாசனையுடன் ஓடும் நதிக்கு அருகில் அமைந்திருக்கிறது.

இந்த நதியில் சென்று அமைதியாக ஓய்வு எடுக்கலாம் அல்லது சைக்கிளில் இங்குள்ள பாரம்பரிய தளங்களை சுற்றிப்பார்க்கலாம்.

 Hoi An

ஹோய் அன் நகரின் ஒவ்வொரு வியட்நாம் புத்தாண்டிலும் (Tết) நடைபெறும் விளக்குத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆயிரக்கணக்கான விளக்குகள் ஒரே நேரத்தில் மிதந்து செல்வதனைப் பார்க்க முடியும்.

2023ம் ஆண்டு Tết ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது. ஒரு வேளை சரியாக இந்த நாளில் தவறவிட்டாலும் கவலைப்பட வேண்டாம்.

ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த திருவிழா சிறிய அளவில் நடைபெறும்.

ஆனால் நெடிய ஆற்றில் மொத்தமாக மிதந்து செல்லும் வண்ண விளக்குகளைப் பார்க்கும் காட்சியை மிஸ் செய்ய வேண்டாம்.

 Ban Gioc Waterfall

இது பல அடுக்கடுக்கான நீர்வீழ்ச்சிகள் இருக்கும் இடம்.

தென்கிழக்கு ஆசியாவின் மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று.

வியட்நாம் : தங்க கைகள் முதல் சுண்ணாம்பு கோபுரங்கள் வரை - வியக்க வைக்கும் தகவல்கள்!
கம்போடியா முதல் லாவோஸ் வரை: பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல 10 நாடுகள் - என்னென்ன பார்க்கலாம்?

Golden Hands Bridge in Da Nang

தங்க கைகள் பாலம் அல்லது பெரிய கைகள் பாலம் என அழைக்கப்படுகிறது.

பா நா மலைகளில் 150 மீட்டர் நீளத்துக்கு இந்த பாலம் அமைந்துள்ளது.

வியட்நாம் : தங்க கைகள் முதல் சுண்ணாம்பு கோபுரங்கள் வரை - வியக்க வைக்கும் தகவல்கள்!
Oman போறீங்களா? - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com