மகாவா எலி : கண்ணி வெடிகளிலிருந்து கம்போடியா மக்களை காப்பாற்றி வந்த எலி மரணம்

போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காமல் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளிடம் இருந்து நூற்றுக்கணக்கான மனிதர்களை காத்து வந்த மகாவா எலி நேற்று மரணமடைந்துள்ளது.
Magawa Rat

Magawa Rat

Newssense

Published on

Magawa Rat

2021 Amazon prime, Netflix, Hotstar : ஓடிடியில் ஓடிய-ஓடாத படங்கள் - ஒரு முழுமையான பார்வை

கம்போடியாவில் போர்களில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் மற்றும் கண்ணி வெடிகள் வெடிக்காமலிருந்து மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன. மண்ணில் இருக்கும் வெடி குண்டுகளைக் கண்டறிந்து மக்களைக் காத்து வந்தது இந்த சூப்பர் ஹீரோ எலி மகாவா. பெரிய உடலமைப்பும் அதீத மோப்ப சக்தியும் உடைய மகாவா எலிக்குக் கடந்த ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பி.டி.எஸ்.ஏ விலங்குகள் நல அமைப்பு துணிச்சலான விலங்கு எனத் தங்கப் பதக்கம் அளித்துக் கௌரவித்தது. இப்போது கம்போடியா அதன் க்யூட்டான வீரனை மிஸ் செய்கிறது.

ஆம் இந்த எலி ஒரு வீரன் தான் ஆனால் போருக்கான வீரன் அல்ல, அமைதிக்கான வீரன்.

Land Mine

Land Mine

Facebook

போர்க்காலத்தில் கம்போடியாவில் 60 லட்சத்திற்கும் மேலான கண்ணிவெடிகள் வெடிக்காமல், கைப்பற்றப்படாமல் விடப்பட்டன. 1990களில் இருந்து 64000க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் மரணித்துள்ளனர். வெடிகுண்டுகளில் சிக்கி மக்கள் உயிரிழப்பதும் காயப்படுவதும் தொடர்ந்தன. 2018ம் ஆண்டு மட்டும் 6000-திற்கும் மேற்பட்ட மக்கள் வெடிகுண்டு விபத்திற்கு ஆளாகினர். அந்த கண்ணி வெடிகளுக்குத் தெரியாது தன் மீது கால் வைப்பது எதிரி நாட்டு வீரரா அல்லது அப்பாவி மக்களில் ஒருவரா என. மகாவா இதுவரை 71 கண்ணிவெடிகளையும், 38 வெடிபொருள்களையும் கண்டறிந்துள்ளது.

Magawa Rat

Magawa Rat

Twitter

ஏழு வயதாகும் மகாவா எலிக்குப் பயிற்சி அளித்தது பெல்ஜியத்தை சேர்ந்த ஏபிஓபிஓ என்னும் நிறுவனம். ஐந்து ஆண்டு பணியில் 1.41 லட்சத்திற்கும் அதிகமான சதுர அடி பரப்பு நிலங்களைக் கிளறியுள்ளது மகாவா. இதன் சேவையைப் போற்றும் படி, அதன் ஓய்வுக்கு பிறகான நாள்கள் சுகமானதாக இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏபிஓபிஓ நிறுவனம் தெரிவித்துள்ளது. African giant pouched rat எனும் வகையை சேர்ந்த 1.2 கிலோ எடையும் 70 செ.மீ நீளமும் உடைய மகாவா ஒரு டென்னிஸ் மைதான அளவு நிலத்தை 20 நிமிடங்களில் முகர்ந்து ஆராயும் திறன் உடையது. இவற்றின் எடை குறைவாக இருப்பதனால் கண்ணி வெடி மேல் கால் வைத்தாலும் வெடிக்காது. வெடிகளை கண்டறிவதில் ரிஸ்க் குறைவு. பிறந்த 4 மாதங்களில் இருந்து பயிற்சி பெறத் தொடங்கும் எலிகள் 8 வயது வரை வாழக்கூடியது. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதில் செலவிட்டுள்ளது மகாவா.

வீடுகளில் எலிகள் மனிதர்களுக்குத் தொல்லை தருவது உண்மைதான். அதுவும் அவற்றின் வசிப்பிடத்தில் நாம் வீடு கட்டியதனாலேயே. ஆனால், எந்த உயிரினமும் மனிதர்களைப் போல தானே தன் இனத்திற்கு வேட்டு வைப்பதில்லை. இரக்கமற்ற மனிதர்கள் போரில் வைத்த குண்டுகளிலிருந்து சக உயிரான மனிதர்களைக் காத்து வந்த மகாவா, உலக அளவில் பலரது பாராட்டையும் நன்றியையும் பெற்றது. வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்ற மகாவா தற்போது மரணத்தை தளுவி அதன் ரசிகர்களாக இருந்த உலக மக்களையும் அதனால் உயிர் காக்கப்பெற்ற கம்போடியா மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com