83 வயதில் சோலோ ட்ரிப்: பசிபிக் கடலில் தனியாக பயணித்த ஜப்பான் முதியவர்

"கரை வந்த பிறகே பிடிக்கிது கடலை... நரை வந்த பிறகே புரியுது உலகை" என்று பிரதீப் குமார் பாடியதை நாம் சீரியஸாக எடுத்துக்கொண்டோமோ தெரியாது. ஆனால் அந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பதை இந்த 83 வயது முதியவர் நிரூபித்துள்ளார்.
Kenichi Horie
Kenichi HorieTwitter
Published on

ஜப்பான் நாட்டை சேர்ந்த கெனிச்சி ஹோரி என்ற 83 வயது நபர், கடந்த மார்ச் மாதம் தொடங்கி, 69 நாட்கள் இடைவிடாது பயணித்து பசிபிக் பெருங்கடலை தன்னந்தனியாக சுற்றிவந்துள்ளார். தன் சோலோ ட்ரிப்பை வெற்றிகரமாக முடித்த கெனிச்சி, தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தனக்குள் இன்னும் இளமை மறையவில்லை என்றும் தெரிவித்தார்.

Kenichi Horie
Kenichi HorieTwitter

"கரை வந்த பிறகே பிடிக்கிது கடலை...நரைவந்த பிறகே புரியுது உலகை" என்று பிரதீப் குமார் பாடியதை நாம் சீரியஸாக எடுத்துக்கொண்டோமா என்று தெரியாது. ஆனால் அந்த வரிகள் எவ்வளவு உண்மை என்பதை இந்த 83 வயது முதியவர் நிரூபித்துள்ளார்.


ஜப்பான் நாட்டை சேர்ந்த சாகச பிரியர் கெனிச்சி ஹோரி என்ற நபர், கடந்த மார்ச் மாதம் துவங்கி, 69 நாட்கள் கடல் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த 69 நாட்களும் பசிபிக் கடலை சுற்றி வந்த கெனிச்சி, மார்ச் மாதம் சான் ஃபிரான்சிஸ்கோவின் ஒரு படகு துறைமுகத்திலிருந்து தன் பயணத்தைத் துவங்கினார்.

Kenichi Horie
Kenichi HorieTwitter

கடைசியாக ஜப்பானின் மேற்கு கரையில் அமைந்துள்ள கீ ஸ்ட்ரைட் என்ற இடத்தில், சனிக்கிழமையன்று தன் பயணத்தை முடித்து வீடு திரும்பியுள்ளார் கெனிச்சி.

இந்த கடற்பயணத்துக்கு கெனிச்சி பயன்படுத்திய கப்பலின் பெயர் சன்டோரி மெர்மெய்ட் III (Suntory Mermeid III). இதன் எடை 990 கிலோ மற்றும் 19 அடி நீளம்.

கரையை அடைந்த கெனிச்சியை வரவேற்க, மலர்க்கொத்துகளுடன் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் காத்திருந்தனர். சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படும்போது தனக்கு தேவையான மருந்துகளை கெனிச்சி எடுத்து சென்றாலும், கண்களுக்கு டிராப்ஸ் மற்றும் Band aid மட்டும் தான் தான் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

"நான் எவ்வளவு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்பதை இது நிரூபிக்கிறது. எனக்குள் இன்னும் இளமை மறையவில்லை" என்று இளமை திரும்புதே பாணியில் கூறிய கெனிச்சி, பசிபிக் கடலை சுற்றிவந்த முதல் மிக வயதான மனிதர் என்ற பெருமையையும் அடைந்தார்.

Kenichi Horie
அட்லாண்டிஸ் : மர்ம நகரம் செல்லும் பசிபிக் கடல் பாதை? - ஓர் ஆச்சர்ய பகிர்வு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com