64 ஆண்டுகளுக்கு பின் காதலியை கரம் பிடிக்கும் 93 வயது முதியவர் - நெகிழவைக்கும் கதை !
64 ஆண்டுகளுக்கு பின் காதலியை கரம் பிடிக்கும் 93 வயது முதியவர் - நெகிழவைக்கும் கதை !twitter

"காத்திருந்து காத்திருந்து..." 64 ஆண்டுகள் கழித்து காதலியை கரம் பிடிக்கும் முதியவர்!

அவருக்காக 64 ஆண்டுகளாக காத்திருந்துள்ளார் ஜோசப். ஜோசப்பின் தங்கைக்கு கடந்த 1959ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அங்கு மணப்பெண் தோழிகளில் ஒருவராக வந்திருந்தார் மேரி.
Published on

லைலா மஜுனு தொடங்கி, தங்கள் காதலுக்காக தியாகங்கள் செய்தவர்கள் இன்றும் போற்றப்படுகின்றனர். காதல் கதைகள் ஒவ்வொன்றுமே நம்மை நெகிழவைக்க தவறியதில்லை.

அப்படி தான் படிப்பவர் மனதை நெகிழவைக்கிறது இவரது காதல் கதையும்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் வசித்து வருபவர் ஜோசப் போடென்சேனா. இவருக்கு 93 வயதாகிறது. இவர் தனது காதலியை செப்டம்பர் 15ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார்.

அவருக்காக 64 ஆண்டுகளாக காத்திருந்துள்ளார் ஜோசப். ஜோசப்பின் தங்கைக்கு கடந்த 1959ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அங்கு மணப்பெண் தோழிகளில் ஒருவராக வந்திருந்தார் மேரி. அப்போது தான் இருவரும் முதன்முறை சந்தித்துக்கொள்கின்றனர்.

முதல் பார்வையிலேயே ஜோசப்பை காதலிக்க தொடங்கிவிட்டார் மேரி. இருவரும் அதன் பிறகு அடிக்கடி சந்தித்துகொண்டனர். காதல் வளர்ந்தது. ஆனால், ஜோசப்பிற்கு ராணுவத்தில் சேர்வேண்டிய நிர்பந்தம் உருவனது. நடனத்தில் ஆர்வமுள்ள மேரியும், ballet நடன கலைஞராக சேர்ந்தாஅர்.

இதனால் இவர்கள் பிரிய நேர்ந்தது. அதன் பிறகு 1962ஆம் ஆண்டு மேரிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். ஜோசப்பும் மேரியின் திருமணத்தில் கலந்துகொண்டார் என்பது தான் இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயமே.

ஜோசப்பும் பலரை டேட் செய்துள்ளார். ஆனால், மேரி அவரை பாதித்த அளவு எந்த பெண்ணும் தன்னை பாதிக்கவில்லை என்பதால் யாரையும் திருமணம் செய்துகொள்ள மறுத்தார் ஜோசப்.

64 ஆண்டுகளுக்கு பின் காதலியை கரம் பிடிக்கும் 93 வயது முதியவர் - நெகிழவைக்கும் கதை !
”என் காதலி” 600 வருட பழமையான மம்மியை 30 ஆண்டுகளாக காதலித்த இளைஞர் - காத்திருந்த அதிர்ச்சி!

சமீபத்தில் குடும்ப விருந்து ஒன்று நடந்துள்ளது. அந்த விருந்தில் தன் காதலியை மீண்டும் சந்தித்துள்ளார் ஜோசப். இவர்களுக்குள் இருந்த காதல் மீண்டும் மலர்ந்தது. மேரியின் கணவரும் 9 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

இதனால் இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளனர். குடும்பத்தினரிடம் கூறியபோது முதலில் அவர்கள் ஆச்சரியப்பட்டாலும், திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். வரும் செப் 15ஆம் தேதி இவர்களின் திருமணம் நடக்கவுள்ளது.

இந்த கதை இணையத்தில் வைரலாகி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

64 ஆண்டுகளுக்கு பின் காதலியை கரம் பிடிக்கும் 93 வயது முதியவர் - நெகிழவைக்கும் கதை !
பாகிஸ்தான் பெண்ணை 7 ஆண்டுகளுக்கு பின் கரம் பிடிக்கும் இந்தியர்- கடல் கடந்த காவிய காதல் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com