Volodymyr Zelenskyy Profile : காமெடி நடிகர் டூ உக்ரைன் அதிபர் - வியக்க வைக்கும் பயணம்

“மக்களின் சேவகன் (Servant of the People) எனும் நிகழ்ச்சி 2015-ஆம் ஆண்டில் உக்ரைன் மக்களால் விரும்பப்பட்ட தொலைக்காட்சி தொடர். அதில் பள்ளி ஆசிரியாக நடித்த செலன்ஸ்கி பின்னர் தற்செயலாக ஒரு விபத்து போல உக்ரைன் நாட்டின் அதிபரானதுதான் கதை.
Volodymyr Zelensky

Volodymyr Zelensky

Twitter

Published on

“மக்களின் சேவகன் (Servant of the People) எனும் நிகழ்ச்சி 2015-ஆம் ஆண்டில் உக்ரைன் மக்களால் விரும்பப்பட்ட தொலைக்காட்சி தொடர். அதில் பள்ளி ஆசிரியாக நடித்த செலன்ஸ்கி பின்னர் தற்செயலாக ஒரு விபத்து போல உக்ரைன் நாட்டின் அதிபரானதுதான் கதை. இக்கதைச் சுருக்கம் பின்னர் உண்மையிலேயே நடந்து விட்டது. இந்த தொடரின் பிரபலத்தை வைத்து தனது துறையை அரசியலுக்கு மாற்றிய செலன்ஸ்கி 2019 ஆம் ஆண்டில் உக்ரைனின் அதிபரானார். ஆக சினிமாவில் பிரலமடைந்தோர் அரசியலில் வெற்றி பெறுவது தமிழ்நாட்டிற்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல.

தற்போது செலன்ஸ்கி அதிபராக இருக்கும் காலத்தில் ரசியா உக்ரைன் மீது படையெடுப்பை நடத்தி வருகிறது. இக்காலத்தில் அவ்வப்போது செல்ஃபி வீடியோக்களை வெளியிட்டு போரில் உக்ரைன் போராடி வருகிறது என்கிறார் செலன்ஸ்கி.

இனி அவரது வரலாற்றைப் பார்ப்போம்.

Volodymyr Zelensky

Volodymyr Zelensky

Twitter

யூத பின்புலம்

சோவியத் யூனியனின் அங்கமாக இருந்த உக்ரைனில், கிரிவி ரிஹ் ஒரு தொழிற்துறை நகரமாகும். மேலும் இங்கே ரசிய மொழிதான் பேசப்பட்டு வந்தது. இந்நகரத்தில் ஜனவரி 25, 1978 ஆன்று ஒரு யூதப் பெற்றோருக்கு பிறந்தவர்தான் செலன்ஸகி. எனவே ரசிய மொழிதான் செலன்ஸ்கியின் சொந்த மொழி.

அவர் தனது யூத பாரம்பரியத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதில்லை என்றாலும் ஜனவரி 2020 இல் அவர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தார். அங்கே இரண்டாம் உலகப் போரின் போது ஆஷ்விட்ஸ் பிர்கெனாவ் மரண முகாமிலிருந்து யூத கைதிகள் கொல்லப்பட்ட நிகழ்ச்சியின் 75 ஆவது நினைவு ஆண்டில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவர் கலந்து கொண்டார். இந்த மரண முகாமில் 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதமக்கள் ஹிட்லரின் படைகளால் விசவாயு செலுத்திக் கொல்லப்பட்டனர். சிறுபான்மையாக இருந்த மற்ற தேசிய இன மக்களும் இதில் கொல்லப்பட்டனர்.

அந்த நிகழ்வில் பேசிய செலன்ஸ்கி சோவியத் படையில் நான்கு சகோதரர்கள் நாஜி ஜெர்மனியை எதிர்த்து போரிட்டதை விவரித்தார். அந்த நால்வரில் ஒருவர் செலன்ஸ்கினியன் பாட்டனார். மற்ற மூவரும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தினரோடு நாஜி ஆக்கிரமிப்பாளர்களால் உக்ரைனில் கொல்லப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அந்த நால்வரில் ஒருவர் தப்பிப் பிழைத்தார். அவரது பேரனாகிய நான்தான் இன்று உக்ரைனின் அதிபராக உங்கள் முன் நிற்கிறேன் என்று அவர் இஸ்ரேல் நிகழ்வில் கூறினார். ரசிய அதிபர் கடந்த வியாழனன்று உக்ரைனை நாஜிமயமாக்கத்திலிருந்து விடுவிப்பது என்று கூறியபோது செலன்ஸ்கி தான் எப்படி ஒரு நாஜியாக முடியும் என்று கேள்வி கேட்டார்.

Volodymyr Zelensky

Volodymyr Zelensky

Facebook

பொழுதுபோக்கு துறையில் செலன்ஸ்கி

2018 ஆம் ஆண்டில் அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு கீவ் தேசிய பொருளாதார பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். மாணவராக இருக்கும் போதே அவர் நாடகங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் அவர் பொழுது போக்கு துறையைச் தேர்ந்தெடுத்து ஒரு வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக மாறினார்.

தனது நகைச்சுவை குழுவினருடன் இணைந்து 2003 ஆம் ஆண்டில் க்வார்ட்டல் 95 எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி வெற்றிகரமாக நடத்தினார். இந்த நிறுவனம் இவருக்கு பல மில்லியன் டாலரை ஈட்டிக் கொடுத்தது.

மேலும் அவர் திரைப்படங்களிலும் நடிக்கத் துவங்கினார். அதில் Love in the Big City (2009) and Rzhevsky Versus Napoleon (2012) ஆகிய இரு திரைப்படங்களும் முக்கியமானவை.

ஆனால் செலன்ஸ்கியின் வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்தியது Servant of the People – மக்களின் பணியாளர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். 2015 ஆம் ஆண்டில் வெளியான இத் தொடரில் அவர் ஒரு விபத்து போல உக்ரைன் அதிபராக பதவியேற்பார். நகைச்சுவையான இத்தொடர் மொத்தம் மூன்று சீசன்களா வெளிவந்தது. பின்னர் இத்தொடர் ஒரு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

தொலைக்காட்சித் தொடரில் தனக்கு கிடைத்த புகழை பயன்படுத்தி 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடந்த உக்ரைன் அதிபர் தேர்தலில் அவர் பங்கேற்றார்.

அவரது அரசியல் கட்சியான The centrist Servant of the People Party -மக்களின் முதன்மைச் சேவகர்களது கட்சி கிட்டத்தட்ட நம்மூர் ஆம்ஆத்மி போன்ற பொருளைக் கொண்டிருக்கிறது. இக்கட்சி தற்போது உக்ரைன் பாராளுமன்றத்தில் 22 இடங்களைப் பிடித்து பெரும்பான்மை கட்சியாக விளங்குகிறது.

Volodymyr Zelensky

Volodymyr Zelensky

Twitter

2019 இல் மாபெரும் வெற்றி

செலன்ஸ்கி 2019 ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். 2014 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த பெட்ரோ பொரோஷென்கோவை அவர் தோற்கடித்தார். இந்த மாபெரும் வெற்றியில் செலன்ஸ்கி கிட்டத்தட்ட 70% வாக்குகளைப் பெற்றார்.

தோல்வியடைந்த போரோஷென்கோ ரசியாவை எதிர்த்து நிற்கும் ஆற்றலோ அனுபவமோ செலன்ஸ்கிக்கு கிடையாது என்று வாக்காளர்களை எச்சரித்தார். செலன்ஸ்கியின் வெற்றியை ரசியாவின் கிரம்ளின் மாளிகை கொண்டாடுவதற்கு காரணம், அனுபவமற்ற செலன்ஸ்கியை வைத்து உக்ரைனில் தனது செல்வாக்கை நிலை நாட்டலாமென ரசியா கருதுவதாக அவர் டிவிட்டரில் தெரிவித்தார்.

ஊழலை ஒழிப்பதே தனது முதன்மைக் குறிக்கோள் என்று செலன்ஸ்கி, தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார். கூடவே கிழக்கு உக்ரைனில் நடக்கும் டான்பாஸ் போரை நிறுத்த விரும்புவதாகவும் ஏப்ரல் 2019- இல் கூறினார்.

வெளிப்படைத் தன்மையுடன் இயங்குவேன் என செலன்ஸ்கி அறிவித்திருந்தார். ஆனால் அவர் உக்ரைன் தொழிற்துறையைக் கட்டுப்படுத்திய பெரும் தொழிலதிபரான இகோர் கொலோமோயிஸ்கியுடன் உறவு வைத்திருந்தார். இந்த முதலாளிதான் செலன்ஸ்கியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு புரலவராக இருந்தார் என்று சிலர் விமர்சிக்கின்றனர்.

மேலும் தான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஒன் பிளஸ் ஒன் எனும் முக்கியமான ஊடக குழுமத்தின் தொலைக்காட்சியில்தான் செலன்ஸ்கி முதன்முறையாக அறிவித்தார். இந்த ஊடக குழுமத்தின் பெரும்பான்மையான பங்கு தொழிலதிபரான கொலோமோயிஸ்கியிடமே இருக்கிறது.

Volodymyr Zelensky

Volodymyr Zelensky

Facebook

பண்டோரா பேப்பர்ஸ் ஊழல் மற்றும் ட்ரம்பின் தேர்தல் சர்ச்சை

அக்டோபர் 2021 இல் பண்டோரா பேப்பர்ஸ் எனும் ஊழல் வெளியானது. இந்த ஊழலை சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) அம்பலப்படுத்தியது. அதில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியும் அவரது தொழிலதிபர் கூட்டாளிகளும் வரியில்லா சொர்க்கம் என அழைக்கப்படும் நாடுகளில்2012 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே கணக்கு வைத்திருந்தது வெளியானது.

இந்த ஊழலில் செலன்ஸ்கியை உள்ளிட்டு 35 உலகத் தலைவர்கள், பில்லியனர்கள், பிபரலங்கள், முதலாளிகளின் கடல் கடந்த வரியில்லா சொர்க்கத் தீவுகளின் கணக்குகள் ஆதாரங்களுடன் வெளியானது.

பண்டோரா ஊழல் கசிவின் படி செலன்ஸ்கி 2019 தேர்தலுக்கு முன்பேயே தனது பணத்தை பினாமி ஒருவருக்கு மாற்றியிருக்கிறார். இதற்கு செலன்ஸ்கி அலுவலக அதிகாரிகள் சொன்ன விளக்கம், தன் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகார அமைப்புகளில் இருந்து செலன்ஸ்கி தன்னைப் பாதுகாத்துக் கொண்டார் என்பதே.

பண்டோரா ஊழல் வெளியான பிறகு செலன்ஸ்கி இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். செலன்ஸ்கியின் தற்போதைய பதவிக் காலம் 2024 இல் முடிகிறது.

செப்டம்பர் 2019 இல் செலன்ஸ்கி வேறு ஒரு பிரச்சினையில் மாட்டினார். அதன்படி அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனக்கு போட்டியாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடனின் மகனை ஒரு ஊழல் குற்றச்சாட்டில் மாட்ட வைக்க செலன்ஸ்கியை கேட்டுக் கொண்டார்.

உக்ரைனிய எரிசக்தி நிறுவனமான புரிஸ்மா ஹோல்டிங்ஸ் குழுவில் பணியாற்றிய தனது மகனுக்கு சலுகைகள் பெறுவதற்கு ஜோ பிடன் தனது அலுவலக செல்வாக்கை பயன்படுத்தினார் என்பது ட்ரம்பின் குற்றச்சாட்டு.

கடந்த ஜனவரியில் ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுத்த செலன்ஸ்கி, தான் ஜோ பிடன் மகனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வெளிவந்த செய்தியால் மனம் புண்பட்டதாக கூறினார். மேலும் தான் உக்ரைன் நாட்டு அதிபர் என்பதால் ட்ரம்ப் அப்படி ஒரு அழுத்தத்தை கொடுக்க முடியாது என்றும் கூறினார்.

செலன்ஸ்கியுடன் ட்ரம்ப் உரையாடிய ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானது. இதை தவறு என்று கூறிய செலன்ஸ்கி இது போன்ற தனிப்பட்ட உரையாடல்களை பகிரங்கப்படுத்துவது தவறு அதற்கு எங்கள் இருவருக்கும் உரிமை இல்லை என்று கூறினார். ஆனால் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்த உரையாடலை பயன்படுத்திக் கொண்டார். அதை பகிரங்கமாக கண்டிக்காத செலன்ஸ்கி ட்ரம்பின் மீது கொஞ்சம் கோபம் மட்டும் இருப்பதாகக் கூறினார்.

இதுதான் செலன்ஸ்கியின் வரலாறு. ஒரு நகைச்சுவை நடிகராக புகழ் பெற்று முதலாளிகளின் ஆதரவில் தேர்தலில் வெற்று பெற்று, ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி இப்போது ரசியாவுடனான போரையும் சந்தித்து வருகிறார்.

அவர் நடிகராக இருந்த போத இருந்த நிம்மதியும், மகிழ்ச்சியும், பிரபலமும் இப்போது இல்லை என்பதை மட்டும் நிச்சயமாகக் கூறலாம்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com