Cannibalism : நர மாமிச சுவையில் தயாரிக்கப்பட்ட பர்கர் - என்ன, எங்கே, ஏன் ? - விரிவான தகவல்

இதுவரை செய்திராத உணவு வகையை தயாரிக்கவேண்டும் என்ற யோசனையில், இந்த நிறுவனம், புதிய விதமான மாமிசத்தை கண்டுபிடித்துள்ளது. இது மனிதனின் மாமிசத்தை உண்டால் வரும் சுவையில் இருக்குமாம்.
Burger
BurgerPexels
Published on

ஸ்வீடன் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் மனித மாமிசத்தை வைத்து பர்கரை தயாரித்துள்ளது.

வினோதமாக இருக்கிறதா?

மனித மாமிசம் என்றால் மனிதனின் மாமிசமே அல்ல. மனிதனின் மாமிசத்தை உண்டால் கிடைக்கும் சுவையில் Plant-based பேட்டியை வைத்து அந்த பர்கரை தயார் செய்துள்ளனர்.

ஐரோப்பாவில் இருக்கும் Oumph! என்ற இந்த நிறுவனம் ஒரு Plant-based இறைச்சி தயாரிக்கும் நிறுவனமாகும். இதுவரை செய்திராத உணவு வகையை தயாரிக்கவேண்டும் என்று யோசித்த இந்த நிறுவனம், புதிய விதமான மாமிசத்தை கண்டுபிடித்துள்ளது.

முற்றிலும் தாவரங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இது மனிதனின் மாமிசத்தை உண்டால் வரும் சுவையில் இருக்குமாம். அதாவது நர மாமிசத்தின் மாற்று என்று வைத்துக்கொள்ளலாம்

இந்த Pattyயை பர்கரில் வைத்துக் கொடுக்கிறார்கள். மேலும் இதற்கான ஒரு விளம்பரத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இறைச்சிகளில் அதிக அளவில் கொழுப்பு இருக்கும் காரணத்தினால் தான், உடல் ஆரோக்கியத்தை கருத்தில்கொண்டு தாவர இறைச்சிகள் தயாரிக்கப்பட்டன.

மேலும், விலங்களின் வதையை விரும்பாதவர்கள், வீகன் உணவுக்காரர்கள் இந்த வகை மாமிச உணவை மாற்றாக உண்ணலாம்.

நுகர்வுக்காக விலங்குகளை வளர்ப்பதால் சுற்றுச்சூழலுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (எஃப்.ஏ.ஓ) கூற்றுப்படி, கால்நடை வளர்ப்பு ஒவ்வொரு ஆண்டும் 7.1 ஜிகா டன் கார்பன் உமிழ்வுகளைக் கொண்டுள்ளது. இதை சரி செய்யும் பொருட்டும் இந்த மாமிச மாற்று உதவுகிறது என்கின்றனர்.

கடந்த ஆண்டு Halloween கொண்டாடப்பட்டபோது முதன் முதலில் இந்த போலி நர மாமிசம் தயாரிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஆன்ட்ரே லிண்டென் கூறும்போது, "எங்களுக்கு எந்த விதமான சுவையும், Texture -வும் வேண்டும் என்று தெரிந்த பின், இந்த பர்கரை சீக்கிரமாக தயாரித்துவிட்டோம்" என்றார்.


மேலும் இவர்களது நோக்கம் இந்த Plant-based இறைச்சியை மனிதர்கள் சாப்பிடவேண்டும் என்பதே தானே, தவிர மனிதனின் இறைச்சியைச் சாப்பிட சொல்லி அல்ல.

இந்த பர்கரை தயார் செய்ததற்காக இந்நிறுவனத்திற்கு Silver Lion என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

Burger
பீட்சா : இத்தாலிய ஏழைகளின் உணவு - உலகம் முழுவதும் பரவியது எப்படி? | Pizza History

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com