அமெரிக்கா: வெப்பத்தால் உருகும் ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை!

6 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த மெழுகு சிலை ஆபிரகாம் லிங்கன் நாற்காலியில் அமர்ந்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை சாண்டி வில்லியம்ஸ் IV- என்பவர் வடிவமைத்தார்.
Abraham Lincoln's Wax Sculpture In US Melts As Temperatures Soar
Abraham Lincoln's Wax Sculpture In US Melts As Temperatures SoarTwitter

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை கடுமையாக வீசி வருவதால் மக்கள் கடும் துன்பத்தில் உள்ளனர். அதனோடு ஆபிரகாம் லிங்கன் சிலை உருகிய விவகாரம் குறித்த தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் 16வது அதிபர் ஆபிரகாம் லிங்கன், அடிமை முறைக்கு எதிராக போராடி ஆட்சிக்கு வந்தவுடன் அதனை ஒழிக்கவும் செய்தார். ஆபிரகாம் லிங்கனை பெருமைப்படுத்தும் விதமாக வாஷிங்டனில் அவருக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டது.

6 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த மெழுகு சிலை ஆபிரகாம் லிங்கன் நாற்காலியில் அமர்ந்து இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. இதனை சாண்டி வில்லியம்ஸ் IV- என்பவர் வடிவமைத்தார்.

இந்த நிலையில் சிலை அமைந்துள்ள வடமேற்கு வாஷிங்டனில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிட்டது. இதனால் லிங்கனின் மெழுகு சிலை உருக தொடங்கியது. கை, கால், அவரின் தலை பகுதி என உருகி தனியே தொங்கிவிட்டது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

விரைவாக சிலை சீரமைக்கப்படும் என நிர்வாகம் கூறி இருந்தாலும் வெப்ப அலையும் ஆபிரகாம் லிங்கன் சிலையும் எப்போது பழைய நிலைக்கு மாறும் என அமெரிக்க மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Abraham Lincoln's Wax Sculpture In US Melts As Temperatures Soar
பிரதமர் மோடியின் தாயாருக்கு சிலை வைத்த கிராமம் - எங்கே இருக்கிறது இந்த கோவில்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com