ஏலியனாக மாற விரும்பும் இளைஞர் - காது, உதடுகளை தொடர்ந்து கால்களை வெட்ட முடிவு

உதடுகள், காதுகள் மற்றும் கை விரல்களை ஏற்கனவே அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றிக்கொண்டுள்ள ஆண்டனி, அடுத்ததாக தனது கால்களை அகற்றிக்கொள்ள போகிறார்.
Anthony Loffredo
Anthony LoffredoInstagram
Published on

பிளாக் ஏலியனாக மாற ஆசைப்படும் பிரஞ்சு நாட்டு இளைஞர் ஒருவர், தனது கால்களை வெட்டிக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.

ஏலியன்கள் உண்மையில் இருக்கின்றனவா? இருந்தால் ஏலியனுக்கும் மனிதர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து உலகளாவிய ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

ஆனால், இங்கு பிரஞ்சு நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏலியனாக மாற வேண்டும் என்று ஆசைகொண்டு, தன் உடம்பில் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இவரது உதடுகள், காதுகள் மற்றும் கை விரல்களை ஏற்கனவே அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றிக்கொண்டுள்ள இவர், அடுத்ததாக இவரது கால்களை அகற்றிக்கொள்ள போகிறார்.

Aliens
AliensPexels
Anthony Loffredo
ரூ.12 லட்சம் செலவு செய்து நாயை போல மாறிய மனிதன் - வைரல் வீடியோ

ஆண்டனி லோஃப்ரெடோ என்ற 27 வயது இளைஞருக்கு ஏலியனாக மாற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்து வந்துள்ளது. சிறு வயது முதலே மனித உடலின் பிறழ்வுகள் மற்றும் உருமாற்றங்கள் குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டதன் காரணமாக இவருக்கு இந்த ஆசை வந்துள்ளது.

இதற்காக தனது 24 வயதில் பிரான்ஸ் நாட்டைவிட்டு ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற ஆண்டனி இதுவரை காதுகள், உதடு, கை விரல்களை அகற்றிக்கொண்டுள்ளார். மேலும் தனது கைகள் மற்றும் தலைப் பகுதிகளில் Reptilian implants செய்துகொண்டுள்ளார். அடுத்ததாக இவர் தனது ஒரு காலை அகற்றிக்கொள்ளவுள்ளார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தைக் கூட, 'தி பிளாக் ஏலியன் பிராஜெக்ட்' என்று தான் பெயரிட்டுள்ளார்

இவர் இதுவரை தன் உடற்பாகங்களை அகற்றிக்கொண்டதில் ஏதாவது பத்திரப்படுத்திக்கொண்டுள்ளாரா என்று கேட்டதற்கு, இவரது நண்பர்கள் இவரது காதுகளை அவர்களிடம் வைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இவரது உருவம் எப்படி இருக்கவேண்டும் என்ற கற்பனை தனக்கு இருப்பதாக கூறியுள்ள ஆண்டனி, அதை இன்னும் மெருகேற்றவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
இவரது தோற்றத்தின் காரணமாக யாரும் தன்னை ஒரு சராசரி மனிதனாக பார்ப்பதில்லை என்று வருத்தம் தெரிவித்தார். மேலும் தனக்கு வேலை கொடுக்கவும் யாரும் தயாராக இல்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Anthony Loffredo
"Kim Kardashian போல தோற்றம் வேண்டாம்" - காஸ்மெடிக் சர்ஜரிக்கு 5 கோடி செல்வழித்த பெண்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com