பாலைவனத்தில் கூட மழை பெய்யும் இங்கு பெய்யாது! - விசித்திர கிராமத்தின் பின்னணி என்ன?

குளிர் காலத்தில் அதிகாலையில் பயங்கர குளிர் இருந்தாலும் சூரிய உதயமான பின்னர் கோடை காலம் போன்று காணப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த பகுதி சூடானதாக இருக்கிறது.
Al Hutaib Yemen, only village in the world where it never rains
Al Hutaib Yemen, only village in the world where it never rainsTwitter

இந்த அண்டம் பல்வேறு அதிசயங்களையும் மர்மங்களையும் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள விசித்திரமான இடங்களை பயண காதலர்கள் தேடி தேடி பார்த்து வருகின்றன. ஒவ்வொன்றும் தனித்துவமான அடையாளங்களை கொண்டுள்ளன.

இந்தியாவிலும் அப்படி பல இடங்கள் உள்ளன, எடுத்துகாட்டாக மேகாலயாவின் மாசின்ராம் என்ற கிராமம் வருடம் முழுவதும மழை பெய்யும் கிராமமாக இருக்கிறது.

ஆனால் மழையே பெய்யாத பகுதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை அது பாலைவனமாக இருக்கலாம் என்று உங்களுக்கு தோன்றும், ஆனால் அது உண்மையில் ஒரு கிராமம்.

இந்த கிராமத்தில் இதுவரை மழையே பெய்தது இல்லையாம். இந்த கிராமம் எங்கு உள்ளது? இதன் பின்னணி என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

ஏமன் நாட்டின் ஹராஜ் என்ற பகுதியில் இருக்கும் அல்-ஹூதாகிப் என்ற கிராமத்தில் தான் இதுவரை மழையே பெய்ததில்லையாம்.

மலைப்பகுதியில் தான் இந்த கிராமம் இருக்கிறது. மலை மீது தான் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கும்.

எழில் கொஞ்சும் இந்த கிராமத்தை பார்க்க வருடம் முழுக்க பல்லாயிர சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

பொதுவாக மலைப்பகுதியில் இருக்கும் இக்கிராமம் குளிர்ந்து இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் இருந்தாலும் இந்த இடம் வெப்பமான பகுதியாக காணப்படுகிறது.

Al Hutaib Yemen, only village in the world where it never rains
Mawlynnong : காசி பழங்குடியினரின் தனித்துவமான கிராமம் - 5 அடடே தகவல்கள்!

குளிர் காலத்தில் கோடை காலம்

குளிர் காலத்தில் அதிகாலையில் பயங்கர குளிர் இருந்தாலும் சூரிய உதயமான பின்னர் கோடை காலம் போன்று காணப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த பகுதி சூடானதாக இருக்கிறது

இந்த பகுதியில் பழங்கால கட்டிடங்களையும் அதே நேரத்தில் மார்டன் கட்டிடங்களையும் காண முடியும். இந்த கிராமத்தில் அல்போரா இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

Al Hutaib Yemen, only village in the world where it never rains
Indian Railways: டிக்கெட் எடுப்போம், ஆனால் ட்ரெயினில் பயணிக்க மாட்டோம் - ஒரு விநோத கிராமம்

இந்த கிராமத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு?

இந்த கிராமத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கிராமத்திற்கு தலைவராக இருந்த முகம்மது புர்காவூதீன், மும்பையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த 2014ம் ஆண்டு மறைந்துவிட்டார்.

அதற்கு முன்பு வரை ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கு ஒரு முறை தன் கிராமத்திற்கு சென்று மக்களை சந்திப்பாராம்.

ஏன் மழை பொழியவில்லை?

மிக உயரமான இடத்தில் இந்த கிராமம் இருப்பதால் இங்கு மழையே பொழிவதில்லை.

இந்த கிராமத்திற்கு கீழே தான் மேகங்கள் சூழ்ந்து நிற்கிறது. அதற்கு கீழே தான் மழைப்பொழிவு இருக்கும் என்பதால் இந்த கிராமத்திற்கு நேரடியாக மழை பெய்ததே இல்லையாம்.

மேகத்தை விட உயரமான இடத்தில் இருப்பதால் இந்த இடம் வெப்பம் மிகுந்த இடமாகவும் காணப்படுகிறது. இதனால் உலகில் மழைப்பொழிவே இல்லாத பகுதியாக அல்-ஹூதாகிப் கிராமம் அறியப்படுகிறது.

Al Hutaib Yemen, only village in the world where it never rains
'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com