அலாஸ்கா : இந்த ஒரு கட்டிடம்தான் முழு நகரமே; என்னென்ன வசதிகள் இருக்கிறது? - ஓர் அடடே ஸ்பாட்

காலநிலை மாற்றத்தால் அங்கு இருக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல சிரமப்பட்டத்தை அடுத்து நிலத்திற்கு அடியில் ஒரு சுரங்கமும் அமைக்கப்பட்டது.
 Alaska is one-house town, home to hundreds
Alaska is one-house town, home to hundredsTwitter
Published on

ஒரு நகரம் என்று சொன்னால் 10 சாலைகள் 100 வீடுகள், 20 அடுக்குமாடி குடியிருப்புகள், 5 கடைவீதிகள் என நம் மைண்டு இந்நேரம் டிஜிட்டல் மேப் போட்டிருக்கும்.

ஆனால் இங்கு ஒரே ஒரு கட்டடம் தான் மொத்த நகரமே என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம் உண்மையில் அப்படி ஒரு நகரம் இருக்கிறது. எங்கு இருக்கிறது என்று வாங்க தெரிந்துக் கொள்ளலாம்.

அமெரிக்கா ஏங்கரேஜிலிருந்து சுமார் 93 கிமீ தொலைவில் அலாஸ்காவில் உள்ள ஒரு நகரம் தான் விட்டியர்.

இந்த நகரத்தில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களும் பெகிச் டவர்ஸில் வசிக்கின்றனர். அந்த ஒற்றை கட்டடம் ஒரு நகரமாகக் குறிப்பிடப்படுகிறது. இதற்கு "ஒரே கூரையின் கீழ் உள்ள நகரம்" என்ற புனைப்பெயர் கூட இருக்கிறது.

ஆரம்பத்தில் சுகாச் இன மக்களின் துறைமுக பாதையின் ஒரு பகுதியாக விட்டியர் இருந்தது. அதன் பின்னர் இந்த இடத்தை ரஷ்ய மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் தங்கம் தோண்டி எடுக்க பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

1915 ஆம் ஆண்டில் அலாஸ்கா பகுதியில் உள்ள பனிப்பாறைக்கு அமெரிக்க கவிஞர் ஒருவர் விட்டியர் என பெயரிட்டார். அதன் பக்கத்தில் இருக்கும் நிலத்திற்கும் அந்த பெயரை சூட்டினார்.

இரண்டாம் உலகப் போரின் போது , ​​அமெரிக்காவின் இராணுவம் விட்டியர் பனிப்பாறைக்கு அருகில் துறைமுகம் மற்றும் இரயில் பாதை வசதியை உருவாக்கியது.

1943 ஆம் ஆண்டில் அலாஸ்கா ரயில்பாதை கட்டி முடிக்கப்பட்டது. துறைமுகம் அலாஸ்காவின் அமெரிக்க வீரர்களுக்கான நுழைவாயிலாக மாறியது. அதன்பின்னர் 1953 இல் அலாஸ்காவின் ராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள் தங்குவதற்காக 15 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.

 Alaska is one-house town, home to hundreds
4 பக்கமும் சுவரே இல்லாத படுக்கையறை - ஜீரோ ஸ்டார் ஹோட்டலின் பலே ஐடியா! பின்னணி என்ன?

காலநிலை மாற்றத்தால் அங்கு இருக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல சிரமப்பட்டத்தை அடுத்து நிலத்திற்கு அடியில் ஒரு சுரங்கமும் அமைக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் கடல் வழியாகவும் சீவார்ட் நெடுஞ்சாலை வழியாகவும் இந்த நகரத்திற்கு செல்ல முடியும்.

ஒரு நகரத்தில் என்னென்ன கட்டடங்கள் இருக்க வேண்டுமோ அது எல்லாமே இந்த ஒரே கட்டடத்திற்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு சுமார் 150 வீடுகள் இருக்கிறது. அதில் பத்து 1 படுக்கை அறைகள் உள்ள வீடுகள், மற்றவை 3 படுக்கை அறைகள் உள்ள வீடுகள்.

 Alaska is one-house town, home to hundreds
'உலகின் தனிமையான வீடு' இதுதான்! - ஏன் கட்டப்பட்டது? பின்னணியில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

இதுபோக கட்டடத்தின் தரைத்தளத்தில் ஒரு காவல் நிலையம், ஒரு தபால் நிலையமும் உள்ளது.

முதல்தளத்தில், விருந்துகள் மற்றும் விழாக்கள் நடத்த ஒரு மண்டபமும் உள்ளது. அதே போல உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், ஒரு தொடக்கப்பள்ளி அனைத்தும் இந்த ஒற்றை கட்டடத்தில் உள்ளது.

தனித்து நிற்கும் இந்த கட்டடத்தை சுற்றி சமீப காலமாக தான் சில சின்னசின்ன உணவகங்கள் வந்துள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com