நீங்கள் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறீர்களா? - இதனை நீங்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்

நீங்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குள் நுழைய வேண்டுமெனில் உங்களிடம் நிச்சயம் நுழைவு அனுமதி ( Entry Permit) இருக்க வேண்டும். அனுமதிச் சீட்டாகவோ அல்லது இ- அனுமதியாகவோ இந்த பெர்மிட் கொடுக்கப்படும். குறுகிய காலம் நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்குவதற்கு இந்த பெர்மிட் அனுமதியளிக்கிறது.
Arabs

Arabs

NewsSense

நீங்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குள் நுழைய வேண்டுமெனில் உங்களிடம் நிச்சயம் நுழைவு அனுமதி ( Entry Permit) இருக்க வேண்டும். அனுமதிச் சீட்டாகவோ அல்லது இ- அனுமதியாகவோ இந்த பெர்மிட் கொடுக்கப்படும். குறுகிய காலம் நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்குவதற்கு இந்த பெர்மிட் அனுமதியளிக்கிறது. ஒவ்வொரு பெரிமிட்டுக்கும் குறிப்பிட்ட கால வரையறை கொடுக்கப்படும். பெரும்பாலும் 2 மாதங்கள் வரை செல்லுபடியாகும்படி பெர்மிட் வழங்கப்படும். அதாவது, அந்த 2 மாத காலத்துக்குள் ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் பெர்மிட் பெற்றவர் வந்துவிட வேண்டும். செல்லுபடிக் காலம் முடிந்துவிட்டால், அந்த பெர்மிட் தானாக காலாவதியாகிவிடும்.

Arabs

செளதி அரேபியா வரலாறு : அந்நாட்டு அரச குடும்பத்தின் முதலீடு குறித்து தெரியுமா? - பகுதி 3

UAE

UAE

NewsSense

யார் மூலமாக நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் வருகிறீர்களோ, அவர்களே பெரிமிட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஸ்பான்சர் என்று அழைக்கப்படும் அவர்கள் அல்லது அந்த நிறுவனம் அமீரகத்தின் குடிமை மற்றும் வெளிநாட்டவர் விவகாரத்துறை இயக்குநரக விதிகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். உதாரணத்துக்கு பணி நிமித்தமாக உங்களை அழைக்கும் நிறுவனமே விண்ணப்பிக்க வேண்டும். அங்கு இருக்கும் உறவினர் மூலம் செல்கிறீர்கள் என்றால் அவர்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் பயணிக்கும் விமான நிறுவனமோ, தங்கும் விடுதியோ கூட விண்ணப்பிக்கலாம். நேரடியாக ஐக்கிய அரபு அமீரக விமான நிலையம் வந்த பிறகு கூட நீங்கள் பெர்மிட் பெறலாம். வளைகுடா நாடுகளில் இருந்து வருவோருக்கு பெர்மிட் அவசியமில்லை.

Arabs

செளதி அரேபியா வரலாறு பாகம் 2 : செளத் குடும்பம் இப்படிதான் Saudi எனும் நாட்டை உருவாக்கியது

UAE

UAE

NewsSense

ஒவ்வொரு பெர்மிட்டுக்கும் நுழைவுக்கான செல்லுபடிக் காலம் இருப்பதுபோல், நுழைந்த பின் அந்த பெர்மிட் கொண்டு எத்தனை நாட்கள் இருக்கலாம் என்ற வரையறையும் இருக்கிறது. குறைந்தபட்சம் 4 நாட்களிலிருந்து அதிகபட்சம் 2 மாதங்கள் வரை அனுமதி அளிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து விமானம் மாறிச் செல்வதற்கு 4 நாட்கள் அனுமதி கொடுக்கப்படுகிறது. பணி நிமித்தமாக வருவோருக்கு 2 மாதங்கள் அனுமதி கொடுக்கப்படுகிறது.

Arabs

செளதி அரேபியா கதை - 1 : அடர் வனம் பாலைவனம் ஆக மாறிய வரலாறு!

பணிக்கான பெர்மிட், குடும்ப உறவினர்களை சந்திப்பதற்கான பெர்மிட், சுற்றுலா அல்லது டிரான்ஸிட் பெர்மிட், மருத்துவ சிகிச்சைக்கான பெர்மிட், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான பெர்மிட் என பல்வேறு வகையான காரணங்களுக்காக பெர்மிட் கொடுக்கப்படுகிறது.

ரெசிடென்ஸ் விசா:

ரெசிடென்ஸ் விசா என்பது, பெர்மிட் காலம் முடிந்தும் அமீரகத்தில் இருக்க வேண்டும் என விரும்புவோர் பெற வேண்டிய அனுமதி. பெர்மிட் காலம் முடிந்த பிறகு ரெசிடென்ஸ் விசா இல்லையெனில், அமீரகத்தில் நீங்கள் இருப்பது சட்ட விரோதமாகும். விதியை மீறி வசிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 100 திர்ஹாம் அபராதமாக விதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகு 10 நாள்கள் கழித்து அபராதம் விதிப்பு தொடங்கும். விசாவுக்கு விண்ணப்பிக்க மருத்துவ தகுதிச் சான்று கட்டாயம். அமீரகம் வழங்கும் அடையாள அட்டைக்கும் விண்ணப்பித்து பெற வேண்டும். இவற்றை வைத்து விண்ணப்பித்தீர்களானால், உங்கள் விசாவுக்கான நோக்கத்தைப் பொறுத்து ஒன்று முதல் 3 ஆண்டுகள் தங்குவதற்கான விசா வழங்கப்படும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com