உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப் பெசோஸ். முன்னணி ஆன்லைன் ஷாபிங் நிறுவனமான அமேசான்.காம் நிறுவனரான இவரது சமீபத்திய அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
124 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரரான இவர் தனது வாழ்நாளிலேயே பெரும்பகுதி சொத்துக்களை அறக்கட்டளைக்கு கொடுக்கப்போவதாக கூறியுள்ளார். சி.என்.என் பத்திரிகைக்கு அவர் அளித்த நேர்காணலில் இதனை முதன்முறையாகக் கூறியுள்ளார்.
உலகப் பணக்காரர்கள் இது போலக் கூறுவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே பில்கேட்ஸ் மற்றும் வாரன் பப்பெட் உள்ளிட்டோர் தங்களது பெரும்பான்மை சொத்துகளை அறக்கட்டளைக்கு எழுதி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெஃப் பெசோஸ் அளிக்கும் நன்கொடைகள் பருவநிலை மாற்றத்துக்கு எதிராகவும், சமூக மற்றும் அரசியல் பிரினைவிகளை எதிர்த்து மனித குலத்தின் ஒற்றுமையைக் காக்கவும் பயன்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கெனவே எர்த் ஃபண்ட் என்ற அமைப்பினை உருவாக்கி பத்து ஆண்டுகளில் 10 பில்லியன் டாலர்கள் சேவைக்காக ஒதுக்கியிருக்கிறார். இந்த தொகை, உலகில் கார்பன் அதிகரிப்பை கட்டுப்படுத்தி இயற்கை வளங்களைக் காப்பதற்கான ஆராய்ச்சிகளையும் பிரச்சாரங்களையும் ஊக்குவிக்க பயன்படும்.
உலகின் நான்காவது பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் 10 லட்சத்து 10 ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர். உலகின் பெரும் பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை அறக்கட்டளைகளுக்கு அளிக்கும் கிவ்விங் ஒப்பதந்த்தில் கையெழுத்திடாததற்கு விமர்சிக்கப்பட்டனர்.
அத்தகைய விமர்சனத்திலிருந்து ஜெஃப் பெசோஸ் தப்பியுள்ள நிலையில் அனைவரும் கனவமும் எலான் மஸ்க் பக்கம் திரும்பியிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust