அழிவின் உச்சத்தில் அமேசான் மழைக்காடுகள் - மனித குலத்தின் எதிர்காலம் அவ்வளவுதானா?

அமேசான் மரங்களும் மழைக்காடுகளும் அழிந்து போகும் ஒரு நிலையை நோக்கிப் பயணிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.
Amazon Forest

Amazon Forest

Twitter

Published on

உலகிலேயே மிகப்பெரிய மழைக்காடுகள் தென் அமெரிக்காவில் இருக்கும் அமேசான் ஆற்றுப் படுகையில் இருக்கின்றன. அமேசான் காடுகளை உலகின் நுரையீரல் என்று அழைப்பார்கள். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அமேசான் மழைக்காடுகள் தற்போது வறட்சி, காட்டு நெருப்பு, மரங்கள் வெட்டி காடு அழிக்கப்படுதல் காரணமாக தன்னை புனரமைத்துக் கொள்ளும் திறனை இழந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

Amazon

Amazon

Facebook

பூமி வெப்பமடைதல்

சவன்னா என்பது நெருக்கமற்ற வறண்ட மரங்கள் மற்றும் புல்வெளிகளைக் கொண்ட காட்டுப் பகுதி. இப்பகுதிகள் காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வாயுவை உறிஞ்சுவதில் வெப்பமண்டல காடுகளை விட குறைவான செயல் திறன் கொண்டவை.

பொதுவில் பிரம்மாண்டமான காடுகள் கார்பனை உறிஞ்சுவது இல்லையென்றால் பூமி வெப்பமடைவது அதிகரிக்கும். அமேசானின் சில பகுதிகள் இப்போது அதிக கார்பன்டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகின்றன என்பதை முந்தைய ஆய்வுகள் தெளிவுபடுத்தின.

“அமேசானின் மரங்கள் ஆரோக்கியத்தை இழந்து வருகின்றன. இதனால் பெருமளவு மரங்கள் அழிவது உச்சத்தை தொடும்" என்கிறார் எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் முனைவர் கிரிஸ் போல்டன்.

கடந்த மூன்று பத்தாண்டுகளின் சாட்டிலைட் புகைப்படங்களை ஆய்வு செய்து பார்த்தால் அமேசான் மழைக்காடுகளின் ஆரோக்கியம் குறித்த அபாயம் அதிகரித்திருக்கிறது.

அமேசான் மழைக்காடுகளில் 75% தம்மை புனரமைத்துக் கொள்ளும் தன்மையை இழந்து வருகின்றன. மேலும் காலநிலை மாற்றம், காட்டுத்தீ, காட்டை அழிக்கும் மனித நடவடிக்கை போன்ற பாதிப்புகளால் வறட்சி அதிகரிக்கிறது. இந்த வறட்சியின் விளைவுகளில் இருந்து மரங்கள் மீள வழக்கத்திற்கும் மாறாக அதிக காலம் எடுக்கும். இத்தகைய சேத சுழற்சி காரணமாக மழைக்காடுகள் இறந்து போகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த அழிவு எப்போது நடக்கும் என்பது இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பால் பல்லுயிர் பேணுதல் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த பேரழிவைச் சந்திக்க நேரிடும். அப்படி அழிவை நோக்கி பயணித்தால்

Amazon Forest

അഹാന കൃഷ്ണ Ahaana Krishnan : looks chic on Western wears

Amazon Dry Forest

Amazon Dry Forest

Twitter

வறண்ட காடுகளாக மாறும்

அமேசானின் மழைக்காடுகள் சில தலைமுறைகளுக்குள்ளாக வறண்ட சவன்னா காடுகளாக மாறும்.

தற்போதே அமேசான் காடுகள் நிறைய கார்பனை சேமித்து வைக்கிறது. அவை அனைத்தும் வளி மண்டலத்தில் கலப்பதால், புவி வெப்பமயமாவது அதிகரிக்கும். மேலும் உலகாளவிய சரிசாரி வெப்பநிலையிலும் பாதிப்பு ஏற்படுத்தும் என்கிறார் முனைவர் போல்டன். இதற்கு காடுகள் அழிக்கப் படுவதை நிறுத்துவது கொஞ்சம் பயனளிக்கும் என்கிறார் அவர்.

ஏற்கனவே அமேசான் மழைக்காடுகளின் ஐந்தில் ஒரு பகுதி இன்றைய தொழிற்துறை வளர்ச்சிக்கு முன்பே அழிந்து விட்டது. தற்போதைய அழிவு இன்னும் பேரழிவைக் கொண்டு வரும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

இந்த ஆய்வை எக்சிடெர் பல்கலைக்கழகம், காலநிலை பாதிப்பு குறித்த ஆராய்ச்சிக்கான போட்ஸ்டாம் நிறுவனம் மற்றும் மியூனிச்சின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இணைந்து நடத்தியுள்ளன. காட்டை அழிப்பதும், காலநில மாற்றமும் இந்த அழிவின் முக்கிய காரணிகளாக இருக்கலாம் என்கிறார் மியூனிச் தொழில்நுட்ப பல்கலைப் பேராசிரியர் நிக்லாஸ் போயர்ஸ்.

இலண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த முனைவர் போனி வாரிங், “இந்த ஆய்வுகள் காலநிலை மாற்றம் மற்றும் வெப்ப மண்டலக் காடுகளை சுரண்டுவது ஆகியவை சேர்ந்து உலகின் மிகப்பெரிய அமேசான் மழைக்காடுகளை ஆபத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. இதுவரை அறிவியல் அறிந்த பத்து உயரினங்களில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில்தான் உயிர் வாழ்கின்றன.” என்கிறார்.

எனில் அமேசான் மழைக்காடுகளின் அழிவு ஒட்டு மொத்தமாக பூமியின் அழிவுக்கு ஒரு துவக்கமாக இருக்கப் போவது நிச்சயம்.

1991 முதல் 2016 வரையிலான செயற்கைகோள் தரவுகள் படங்களை வைத்து செய்யபட்ட இந்த ஆய்வையும் அதன் கண்டுபிடிப்புகளையம் நேச்சர் கிளைமேட் சேஞ்ச் - Nature Climate Changeஇதழ் வெளியிட்டுள்ளது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com