பழமையான கிரேக்க சிலையில் மடிக்கணினி? வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

37 அங்குல உயரம் கொண்ட இந்தச் சிலையில், ஒரு பெண் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் அமர்ந்திருப்பதையும், ஒரு இளம் பையன் ஒரு மெல்லிய பெட்டியைத் திறந்து வைத்திருப்பதைக் காணலாம்.
Ancient Greek Statue Of Woman Holding 'Laptop' ?
Ancient Greek Statue Of Woman Holding 'Laptop' ?Twitter
Published on

ஒரு பழமையான கிரேக்க சிலையில் மடிக்கணினி இருப்பதை கண்டு இணையவாசிகள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள மலிபுவில் உள்ள ஜே. பால் கெட்டி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த சிலை, பழமையான கிரேக்க சிலையாக அறியப்படுகிறது. ஜே. பால் கெட்டி அருங்காட்சியகத்தின் நிறுவனர் ஜீன் பால் கெட்டி ஆவார்.

J. Paul Getty Museum
J. Paul Getty Museum

இந்த அருங்காட்சியகத்தில், பண்டைய கிரேக்கம், பண்டைய ரோம் மற்றும் பண்டைய எரித்திரியா நாடுகளின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் இணையவாசிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது.

37 அங்குல உயரம் கொண்ட இந்தச் சிலையில், ஒரு பெண் சிம்மாசனம் போன்ற நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் காணலாம், ஒரு இளம் வேலைக்காரன் ஒரு மெல்லிய பெட்டியைத் திறந்து வைத்திருப்பதைக் காணலாம்.

அந்த பெட்டியை தான் மடிக்கணினியை போன்று இருப்பதாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Ancient Greek Statue Of Woman Holding 'Laptop' ?
வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட விநாயகி சிலை - ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலானதையடுத்து, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பலர் இது பீட்சா பெட்டியாக இருக்கலாம் என்றும், சிலர் இது அழகு சாதனப் பெட்டியாக இருக்கலாம் என்று கூறினர்.

ஃபோர்ப்ஸின் உயிர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிறிஸ்டினா கில்க்ரோவ் அந்த புகைப்படத்தில் இருப்பது மடிக்கணினி என்ற கோட்பாட்டை மறுத்தார். நகைப்பெட்டியாக இருக்க வேண்டும் என்று சிற்ப கலைஞர் விரும்பியிருக்கலாம் என்றார்.

Ancient Greek Statue Of Woman Holding 'Laptop' ?
Captain Zoya Agarwal: அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம் பெற்ற இந்திய பெண் விமானி பெயர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com