பயனர்களின் அனுமதியின்றி உளவு பார்க்கும் ஆப்பிள் நிறுவனம்?

ஐஃபோன்களில் இருக்கும் ஒரு முக்கிய அம்சம், நாம் பதிவிறக்கும் எந்த ஒரு புதிய செயலியை பயன்படுத்த தொடங்கும் போதும், அது நம் நடவடிக்கைகளை கண்காணிக்கலாமா வேண்டாமா என தேர்வு செய்யும் ஆப்ஷனை நமக்கு கொடுக்கும்.
Apple App Store
Apple App StoreCanva

ஆப்பிள் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களின் தரவுகளை அனுமதியின்றி சேகரிப்பதாகவும், அவர்களது நடவடிக்கைகளை கண்காணிப்பதாகவும் நியூயார்க்கை சேர்ந்த ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

ப்ளூம்பெர்க் லா பத்திரிகையின் அறிக்கை படி, ஆப்பிள் நிறுவனம், பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளை மொபைல் ஆப்கள் மூலம் ரெக்கார்ட் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த எலியட் லிப்மன் என்ற நபர் ஐஃபோன் 13 பயன்படுத்துகிறார். அவர் கூறுகையில், “ஆப்பிள் நிறுவனம் பயன்பாட்டாளர்களுக்கு அளிக்கும் ப்ரைவசி உத்தரவாதம் தான் அதன் போட்டியாளர்களிடமிருந்து அதை தனித்து காட்டுகிறது. ஆனால், அது அனைத்தும் வெறும் மாயை தான்” என்று கூறியிருக்கிறார்

ஐஃபோன்களில் இருக்கும் ஒரு முக்கிய அம்சம், நாம் பதிவிறக்கும் எந்த ஒரு புதிய செயலியை பயன்படுத்த தொடங்கும் போதும், அது நம் நடவடிக்கைகளை கண்காணிக்கலாமா வேண்டாமா என தேர்வு செய்யும் ஆப்ஷனை நமக்கு கொடுக்கும்.

ஆப் டெவலப்பர்கள் மற்றும் சுயாதீன ஆராய்ச்சியாளர்களான டாமி மிஸ்க் மற்றும் தலால் ஹஜ் பக்ரி ஆகியோர் கூறுகையில், பயனர்கள் தகவலை பகிரவேண்டாம் எனக் கூறுவது, தரவு பரிமாற்றத்தை பாதிக்காது என்றும் ஆப்பிள் இன்னும் பல முதல் தரப்பு பயன்பாடுகளில் அதன் பயனர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகிறது என்றும் வெளிப்படுத்தினர்.

இவ்வாறு ஐஃபோன்களில் வழங்கப்படும் பலதரபட்ட செயலிகள் மூலம், பயன்படுத்துபவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, சேகரித்து அதை பயன்படுத்தி நிறுவனம் பணம் ஈட்டி வருவதாக அந்த வழக்கு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Apple App Store
Iphone14 இனி இந்தியாவில் தயாரிக்கப்படும்: ஆப்பிள் எடுத்த முடிவுக்கு காரணம் என்ன?

அதாவது ஆப்பிள் நிறுவனம், ஆப் ஸ்டோர் மூலம் இந்த தரவுகளை சேமிப்பதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். ஆப்பிளின் ஆப்ரேட்டிங் சிஸ்டமான iOS பயனர்கள் ஆப் ஸ்டோரில் என்ன தேடுகிறார்கள், எந்த மாதிரியான செயலிகளை பதிவிறக்குறார்கள், எங்கு தொடுகிறார்கள், என்ன விளம்பரங்களை பார்க்கிறார்கள் போன்ற தரவுகளை விவராமாக, துல்லியமாக ரியல் டைமில் பகிருவதாகவும் அமெரிக்க செய்தி தளம் ஒன்று குறிப்பிடுகிறது.

சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனம், அத ஆப் ஸ்டோரில் புதிய விளம்பங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. கடந்த மாதம் இந்த விளம்பரங்கள் பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து, டெவலப்பர்கள் தங்கள் விளம்பரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைத் கண்காணிக்க அக்சஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகவே வாடிக்கையாளர்கள் தரவுகளை நிறுவனம் சேகரித்து வரலாம் என்கின்றனர்.

நிறுவனம் iOS 14.6 ஐ வெளியிட்ட மே 2021 முதல் பயனர் நடத்தையை ஆப்பிள் கண்காணிக்கிறது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. இதுவரை இந்த வழக்கிற்கு ஆப்பிள் நிறுவனம் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Apple App Store
ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.160 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com