Nepal Flight Crash: கடைசி நேரத்தில் விபத்துக்குள்ளான விமானம்; 32 பேர் பலி - எப்படி?

4 விமானக் குழுவினர் உட்பட மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர். இதில் 15 வெளிநாட்டவர்கள் ( 5 பேர் இந்தியர்கள், 4 பேர் ரஷ்யர்கள், 2 பேர் கொரியர்கள்) அடக்கம். இந்த விமானம் போக்காரா விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறக்கப்படும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
Nepal Crash
Nepal Crashtwitter

இன்று காலை நேபாள் தலைநகர் காட்மண்டுவிலிருந்து போக்காராவுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32பேர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நேபாள் யெட்டி ஏர்லைன்ஸ் விமானம், ஏ டி ஆர் 72, இன்று காலை 10.30 மணியளவில் நேபாள தலைநகர் காட்மண்டுவிலிருந்து போக்காராவை நோக்கி புறப்பட்டது.

இதில் 4 விமானக் குழுவினர் உட்பட மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர். இதில் 15 வெளிநாட்டவர்கள் ( 5 பேர் இந்தியர்கள், 4 பேர் ரஷ்யர்கள், 2 பேர் கொரியர்கள்) அடக்கம். இந்த விமானம் போக்காரா விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறக்கப்படும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

விபத்துக் குறித்து காஸ்கியின் தலைமை மாவட்ட அதிகாரி டெக் பகதூர் கே.சி., "மாவட்ட காவல் துறை மற்றும் மீட்புக் குழு மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்" எனவும், இதுவரை 32 பேரின் உடல்களை கைப்பற்றியுள்லதாகவும் கூறினார்.

மரண எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 22 பேருடன் சென்ற தாரா ஏர் விமானம் 14,500 அடி உயரத்தில் இமயமலையில் விழுந்து நொறுங்கியது.

இது 10 ஆண்டுகளில் அந்நாட்டின் 19 வது விமான விபத்து மற்றும் அதே காலகட்டத்தில் அதன் 10 வது ஆபத்தான விபத்து என்று விமான பாதுகாப்பு நெட்வொர்க் தரவுத்தளம் தெரிவித்துள்ளது.

Nepal Crash
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com