இது ஒரு கதை. அந்தப் பெரும் புலி சுறாமீன் மிகவும் மோசமான நாளை சந்தித்தது.
மற்ற சுறாக்கள் மற்றும் மீன்கள் அந்த நபரைப் பிடித்துக் கொண்டிருந்தன. அதே சமயம் அந்த மீன்கள் அவருக்கு உணவளித்தன. அந்த மீன்களுடன் அந்த நபர் சண்டையிட்டார். இப்படியாக அந்த நபர் ஆஸ்திரேலியாவின் கார்பென்டேரியா வளைகுடாவின் நீரில் உள்ள வாண்டர்லின் ராக்ஸில், ஹேமர்ஹெட் சுறாவையும், சில ஸ்டிங்ரேக்களையும் சந்தித்தார். அந்த மீன்கள் அவைகளது வீட்டிற்கு அந்த நபரை அழைத்து தங்களது சொந்த துயரங்களைப் பற்றிப் பேசின.
இந்தக் கதையைப் பார்ப்பதற்கு முன்பு ஹேமர்ஹெட் சுறா (hammerhead shark) வையும், ஸ்டிங்ரே(stingrays)க்களையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.
ஹேமர்ஹெட் சுறாக்கள் என்பது ஸ்பைர்னிடே குடும்பத்தை உருவாக்கும் சுறாக்களின் குழுவாகும். அவற்றின் தலையின் அசாதாரண மற்றும் தனித்துவமான அமைப்பிற்காக ஹேமர்ஹெட் என்று பெயரிடப்பட்டது. அவை தட்டையான மற்றும் பக்கவாட்டாக செபலோஃபோயில் எனப்படும் "சுத்தி" வடிவத்தில் இருக்கின்றன. பெரும்பாலான ஹேமர்ஹெட் இனங்கள் ஸ்பைர்னா இனத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ஸ்டிங்ரேக்கள் (ஒரு வகை திருக்கை) உடனடியாக அடையாளம் காணக்கூடிய மீன்களாகும். அவற்றின் பான்கேக் போன்ற உடல்கள் தண்ணீருக்குள் அழகாகச் சறுக்குகின்றன. உலகின் பெருங்கடல்களிலும், சில நன்னீர் ஆறுகள் மற்றும் ஏரிகளிலும் சுமார் 200 வகையான ஸ்டிங்ரேக்கள் வாழ்கின்றன. உலகெங்கிலும் உள்ள ஸ்டிங்ரேக்கள் தொடர்ந்து உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இனி இந்த மீன்களைச் சந்தித்துப் பேசிய மனிதனது கதைக்கு வருவோம்.
இது உலகின் பழமையான கதைகளில் ஒன்றாகும். இக்கதையின் படி புலி சுறா கனவு காண்கிறது. இது வெறும் கனவு மட்டுமல்ல. இந்தக் 'கனவு'களைபழங்குடியின மக்கள் தங்கள் 40,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு மற்றும் புராணங்கள் என்று கருதுகின்றனர். இந்த கதையில், புலி சுறாவால் ஆஸ்திரேலியாவின் கார்பென்டேரியா வளைகுடா மற்றும் ஆறுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது கனவாக விவரிக்கிறது. யன்யுவா பழங்குடியின மக்களின் மூலம் இந்த கதை வாய் வார்த்தை வழியாகத் பல தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டது. அவர்கள் தங்களை 'லி-அந்த விரியாரா' அல்லது 'உப்பு நீரின் மக்கள்' என்று அழைத்துக் கொள்கிறார்கள்.
வாண்டர்லின் தீவின் பாறைகள் மற்றும் மணற்கல் பாறைகளைக் கடந்து, வெரியன் ஆற்றின் முகத்துவாரத்தை நோக்கி நீங்கள் சென்றால் துகோங்குகளும் மீன்களும் நீந்திச் செல்வதைப் பார்க்கலாம். இந்த படைப்புக் கதையில் வரும் புலி சுறாவின் பாதையில் சுறா துடுப்புகளின் பார்வைக்காக அலைகளுக்கு அடியில் தேடினால் ஒருவேளை அவைகள் உங்கள் கண்களுக்குத் தட்டுப்படலாம்.
வளைகுடா வழியாகத் தனது வழியை உருவாக்கி, நிலப்பரப்பில் நீர் துளைகளையும் ஆறுகளையும் உருவாக்கும்போது புலி சுறாவின் பயணம் சவாலானது. அந்த மீன் தங்களுடன் வாழ விரும்பாத பல கோபமான விலங்குகளால் திருப்பி விடப்பட்டது. இப்படியாகச் செல்லும் இந்தக் கதையின் மூலம் இன்று நாம் காணும் கார்பென்டேரியா வளைகுடாவின் நீரை உருவாக்கச் சுறா உதவியிருப்பதை அறியலாம்.
"எங்கள் கனவுகளில் வரும் புலி சுறாக்கள் மிகவும் முக்கியமானவை" என்று பழங்குடியின முதியவர் கிரஹாம் ஃப்ரைடே கூறினார். அவர் இங்குக் கடல் ரேஞ்சராகவும், யான்யுவா மொழியைப் பேசும் சிலரில் ஒருவராகவும் இருக்கிறார். இங்குள்ள சிலர் இன்னும் புலி சுறாவை தங்கள் மூதாதையர் என்று நம்புகிறார்கள். மேலும் யன்யுவா மொழி என்பது 'புலி சுறா மொழி' என்று பெயர் பெற்றிருக்கிறது. ஏனெனில் இந்த மொழியில் கடல் மற்றும் சுறாவுக்குப் பல சொற்கள் இருக்கின்றன.
யான்யுவா பழங்குடி மக்கள் பாரம்பரியமாக இந்த நீரில் மீன் பிடிப்பது, மீன், ஆமை மற்றும் துகோங்கைப் பிடித்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்கள் மிகவும் அரிதாகத்தான் சுறா மீன்களைப் பிடிக்கிறார்கள். யான் யுவா பழங்குடி மக்களின் முதன்மையான வாழ்விடம் ஐந்து முக்கிய தீவுகள் மற்றும் 60க்கும் மேற்பட்ட சிறிய, தரிசு மணற்கல் தீவுகளான சர் எட்வர்ட் பெல்லெவ் குழுமத்தின் 2,100 சதுர கிமீ பரப்பளவில் பரவியுள்ளன.
“சுறாவைப் பற்றிய புரிதலை மொழி கொண்டு வருகிறது. சுறாவிற்குப் பெண்களும் ஆண்களும் வைத்திருக்கும் ஐந்து வெவ்வேறு வார்த்தைகள் யான்யுவா விலங்குகளுடன் எவ்வளவு நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகிறது" என்று கிரஹாம் ஃப்ரைடே கூறினார்.
சுறாவைப் பற்றிய பெண்களின் வார்த்தைகள் அதன் வளர்ப்புப் பக்கத்தை உணவு மற்றும் உயிரைக் கொண்டு வருவதாக விவரிக்கின்றன. அதே சமயம் ஆண்களின் வார்த்தைகள் சுறாக்களை 'படைப்பாளி' அல்லது 'மூதாதையர்' போன்று குறிக்கிறது.
யான்யுவா ஆண்களும் பெண்களும் வெறும் பேச்சுவழக்கோடு நின்றுவிடவில்லை. விழாக்கள் மற்றும் மரியாதைக்குரிய மொழியாகவும் அது கருதப்படுகிறது. பிராட்லியின் கூற்றுப்படி, 'கையொப்பமிடும் மொழி'யாகவும் அது இருந்தது. மக்கள் அமைதியாக இருக்க வேண்டியிருக்கும் போது வேட்டையாடுவதற்கு அல்லது சில சமயங்களில் பயணிகள் புனிதமான இடத்திற்குள் நுழையும்போது சைகை செய்வது பயனுள்ளதாக இருக்கும். சிலருக்கு இப்போதும் பல சைகை வார்த்தைகள் நினைவில் உள்ளன. குழந்தைகள் 'ஸ்ட்ரிங் லாங்குவேஜ்' கற்றுக் கொள்கின்றனர்.
யான்யுவா மொழியைப் பாதுகாப்பது கடலின் கலாச்சாரம் மற்றும் உயிரினங்களைப் பாதுகாப்பதோடு பிணைக்கப்பட்டுள்ளது. பிராட்லி போன்ற மொழியியலாளர்கள் இந்த மொழியை எழுத்து வடிவில் பாதுகாக்க கிரஹாம் ஃப்ரைடே மற்றும் பிற யான்யுவா மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களின் மொழி இல்லாமல், கடல் மற்றும் அவர்களின் வீட்டைப் பற்றிய ஆழமான புரிதலைப் பாதுகாப்பது யான்யுவாவுக்கு கடினமாக இருக்கும்.
சுறா மீன்களோடு இணைந்து ஒரு பழங்குடி சமூகம் வாழ்வதோடு தனது மொழி அமைப்பை வைத்துக் கொள்வது உண்மையிலேயே வியக்கத்தக்க விசயம். முக்கியமாக இயற்கையோடு இணைந்து வாழ்வது எப்படி என்பது இந்த மக்களுக்கு இயல்பாக இருந்துள்ளது என்பதும் வாழ்த்துவதற்குரியது.
"யான்யுவாவைப் போல ஆங்கிலம் கடலைப் புரிந்து கொள்ளாது" என்று வழிகாட்டி ஸ்டீபன் கூறினார்.
2015ம் ஆண்டில், வளைகுடாவின் சில பகுதிகள் ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் யான்யுவா மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 1970களில் இருந்து பிராந்தியத்தில் நில உரிமைகோரல்களின் ஒரு பகுதியாக நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் பழங்குடி மக்கள் தமது பகுதிகளைப் பெற்றனர். இந்த நீர்நிலைகளை நன்கு அறிந்த வனக்காவலர்கள் இந்த மறைந்து வரும் மொழியையும் இந்த கடல் உயிரினங்களையும் பாதுகாக்க உழைக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடையாதோர் யாரும் இருக்க முடியாது.
உண்மையில் யான்யுவா ஒரு கடல் மொழி என்றால் யாரும் மறுக்க முடியாது. பூமியில் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருக்கும் கடலைப் பற்றி ஒரு மொழி பேசுகிறது என்றால் அது எவ்வளவு சிறப்பானது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp