ஸ்பெயின் நாவரே பகுதியில் அமைந்துள்ள இந்த கஞ்சாத் தோட்டம் 166 ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையாக ஸ்பெயின் அதிகாரிகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய கஞ்சா தோட்டத்தை அழித்துள்ளனர்.
இந்திய மதிப்பில் 822 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை அழித்ததாக ஸ்பெயின் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் 166 ஏக்கர் நிலப்பரப்பின் நடுப்பகுதியில் கஞ்சா சாகுபடியை தொடங்கியதாகவும், தொழில்துறை நோக்கங்களுக்காக கஞ்சாவை பயிரிட அனுமதி பெற்ற நிலையில் சட்டவிரோதமாக இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திற்கு ஏற்றுமதி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.