இறந்த மனித உடலில் உயிருடன் இருந்த பாம்பு: பிரேத பரிசோதனையின் போது அலறியடித்து ஓடிய பெண்!

ஒரு முறை, பிரேத பரிசோதனை செய்துக்கொண்டிருந்தபோது, அந்த உடலில் இருந்து உயிருடன் ஒரு பாம்பு வெளிவருவதை பார்த்துள்ளார் ஜெசிகா.
இறந்த உடலில் உயிருடன் பாம்பு!
இறந்த உடலில் உயிருடன் பாம்பு! canva
Published on

பிரேத பரிசோதனையின் போது இறந்தவரின் உடலில் இருந்து உயிருடன் பாம்பு ஒன்றை கண்டுபிடித்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

ஜெசிகா லோகன் என்ற 31 வயது பெண் அமெரிக்காவில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக பணியாற்றுகிறார். எப்போதும் ஏதாவது வித்தியாசமாக நடக்கும் என்பதால், தன் வேலையை மிகவும் விரும்பிச் செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

ஜெசிகா 9 ஆண்டுகளாக இந்த பணியில் இருக்கிறார். இந்நிலையில், தனக்கு நேர்ந்த ஒரு கோர அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார் ஜெசிகா.

dead body
dead bodyTwitter

ஒரு முறை, பிரேத பரிசோதனை செய்துக்கொண்டிருந்தபோது, அந்த உடலில் இருந்து உயிருடன் ஒரு பாம்பு வெளிவருவதை பார்த்துள்ளார் ஜெசிகா.

பாம்பு அந்த நபரின் தொடை பகுதியிலிருந்து வெளிவந்ததை பார்த்த ஜெசிகா பயந்துபோய் அந்த அறையை சுற்றி அலறியபடி ஓடியுள்ளார். பாம்பை பிடித்து அகற்றிய பிறகே மீண்டும் தன் வேலையை தொடர உடலின் அருகில் சென்றதாக அவர் தெரிவித்தார்.

ஒரு ஓடை அருகில் அந்த உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்போது உடலுக்குள் அந்த பாம்பு புகுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இறந்த உடலில் உயிருடன் பாம்பு!
கட்டிலில் படுத்திருந்த பெண்ணின் முதுகு மேலேறி படம் எடுத்த நாக பாம்பு | Viral Video
Snake
Snake

தன் அனுபவம் குறித்து பேசிய ஜெசிகா, “இறந்தவர்களின் உடல்கள் எங்கு எந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து தான் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கும்.

குளிரான, உலர்ந்த இடங்களில் உடல்கள் இருந்தால், பூச்சிகள், ஆபத்தான உயிரினங்கள் பிரேதங்களை அணுகாது. ஆனால், சூடான, ஈரப்பதமான இடங்களில் பூச்சிகள் உடலில் அதிகம் இருக்கும்.” என்றார்.

மருத்துவராக வேண்டும் என நினைத்த ஜெசிகாவுக்கு, குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேத பரிசோதனையாளராக பணியாற்றிவருகிறார் ஜெசிகா.

இறந்த உடலில் உயிருடன் பாம்பு!
காதுக்குள் புகுந்த பாம்பு; அலறும் சிறுமி - வைரலாகும் திக் திக் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com