Bali all set to impose a $10 tourism tax starting from Valentine’s Day
Bali all set to impose a $10 tourism tax starting from Valentine’s Day Canva

Bali: காதலர் தினத்தில் இருந்து சுற்றுலா வரி விதிக்கும் பாலி!

பாலியில் நுழையும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சுற்றுலா வரி செலுத்த வேண்டும். இந்தோனேசியாவின் பிற பகுதிகளிலிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது தரை வழிகள் மூலம் வரும் பயணிகளும் வரி செலுத்த வேண்டும், குழந்தைகளுக்கும் இந்த வரி பொருந்தும்.

இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு தீவு தான் பாலி. நாடு அதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவற்றில் புகழ்பெற்றிருக்கிறது.

பலதரப்பட்ட தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளை கொண்டிருக்கும் பாலி எப்போதும் ட்ராவலர்ஸ்களுக்கான ட்ரீம் பிளேஸாக இருந்து வருகிறது.

இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. பலரும் இந்த தீவுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.

பாலி அதன் புதிய சுற்றுலா வரியை பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் விதிக்கவுள்ளது.

சுற்றுலா வரியிலிருந்து விலக்கு பெற விரும்புவோர், பாலிக்குள் நுழைவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

உள்ளூர் சுற்றுலா ஆணையம் இந்த விண்ணப்பங்களை ஐந்து வேலை நாட்களுக்குள் மதிப்பீடு செய்து முடிவெடுக்கும். அதன் பிறகு அவர்களின் முடிவு lovebali.baliprov.go.id மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு தெரிவிக்கப்படும்.

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, பாலியின் சுற்றுலா வரியின் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. இந்த வரி தீவின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கும் கூடுதல் நிதியை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.

பாலியில் நுழையும் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சுற்றுலா வரி செலுத்த வேண்டும். இந்தோனேசியாவின் பிற பகுதிகளிலிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது தரை வழிகள் மூலம் வரும் பயணிகளும் வரி செலுத்த வேண்டும், குழந்தைகளுக்கும் வரி பொருந்தும்.

2022 இல் பாலிக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Bali all set to impose a $10 tourism tax starting from Valentine’s Day
பாலி: 'மிக பெரிய இந்து கோவில்' 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட Pura Besakihயின் வரலாறு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com