Bee - Friendly பேருந்து நிறுத்தங்களை அமைக்கும் நகரம்!

பேருந்து நிழற்குடைகளின் மேலே செடிகளை அமைத்து வாழ்விடங்களை உருவாக்கியுள்ளனர். வரும் மே மாதம் முதல் இந்தவகை பேருந்து நிறுத்தங்கள் நடைமுறைக்கு வரும்.
Bee - Friendly பேருந்து நிறுத்தங்களை அமைக்கும் நகரம்!
Bee - Friendly பேருந்து நிறுத்தங்களை அமைக்கும் நகரம்!Twitter
Published on

இங்கிலாந்தில் உள்ள டெர்பி நகரத்தின் பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் நிழற்குடைகள் "Bee- Friendly" ஆக பூச்சிகளுக்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இது நகரத்தின் சுற்றுசூழலை மேம்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது.

பேருந்து நிழற்குடைகளின் மேலே செடிகளை அமைத்து வாழ்விடங்களை உருவாக்கியுள்ளனர். வரும் மே மாதம் முதல் இந்தவகை பேருந்து நிறுத்தங்கள் நடைமுறைக்கு வரும்.

இந்த வகையான நிழற்குடைகளை உருவாக்கும் வரை பயணிகள் நிற்க தற்காலிக கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

2022 முதல் நகர் முழுவதும் 90 நிழற்குடைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதில் பாதிக்கும் மேல் பூச்சிகளுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்படுகிறது.

போக்குவரத்துக்கான டெர்பி சிட்டி கவுன்சில் அமைச்சரவை உறுப்பினர் கார்மெல் ஸ்வான், "பூர்வீக பல்லுயிர் பெருக்கத்தை ஆதரிப்பதற்கும், ஆரோக்கியமான உள்ளூர் சமூகங்களை உருவாக்குவதற்கும், பசுமையை நகர்ப்புறங்களை மீண்டும் கொண்டு வருவதற்கும் நிபுணத்துவ சூழலியல் நிபுணர்களுடன் இணைந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது." எனப் பேசியுள்ளார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com