மூன்றாம் உலகப் போர் : ரஷ்யா போர் குறித்து அமெரிக்க அதிபர் பைடன் சொன்ன பதில்

மூன்றாம் உலகப் போரை தவிர்க்கவே ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடியாக மோதவில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
Joe Biden

Joe Biden

Twitter

Published on

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் கடுமையான போர் நடந்து வரும் சூழலில் ஜோ பைடன் தாங்கள் ஏன் போரில் கலந்துக்கொள்ளவில்லை என்று ஜோ பைடன் புது விளக்கம் அளித்துள்ளார்.இச்சண்டையில் நேட்டோ படைகள் ரஷ்யாவிற்கு எதிராக களமிறங்கினால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழி வகுக்கும் என்று தான் நாங்கள் இந்த போரில் கலந்துகொள்ளவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

<div class="paragraphs"><p>Vladimir Putin</p></div>

Vladimir Putin

Facebook

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி இன்றுடன் 16 நாட்கள் ஆகின்றன. இதனிடையே இருதரப்பும் பெலாரஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமைத்ரோ குலேபாவும் நேற்று முன்தினம் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், "ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்த முழுவிவரங்களை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்" என்று அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார்.

இச்சூழலில் உக்ரைனும் அமெரிக்காவும் இணைந்து உயிரி ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றஞ்சாட்டினார். மேலும், இவ்வாறாக செய்து மாஸ்கோவை மூன்றாம் உலகப் போருக்கு தூண்ட வேண்டாம் என எச்சரித்தார்.

<div class="paragraphs"><p>Joe Biden</p></div>
உக்ரைன் போர் : ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தடை - இதுதான் ரஷ்யா எடுத்துள்ள புதிய நடவடிக்கை

உக்ரைனை ரஷ்யா ஒருபோதும் வெற்றிகொள்ள முடியாது என்றும், உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற உலக நாடுகளும் ஆதரவாக இருப்பதாகவும் பைடன் பேசினார். ரஷ்யா ஏற்கனவே மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புடின் தொடர்ந்து போர் நடத்திக்கொண்டிருந்தால் மேலும் பல பொருளாதார தடைகள் அந்நாடு மீது விதிக்கப்படும் என்றும் பைடன் எச்சரித்தார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஒருவேளை ரசாயன ஆயுதங்கள் பிரயோகித்தால் அதற்கு அந்நாடு மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டி வரும் என்றும் அமெரிக்க அதிபர் பைடன் எச்சரித்தார்.

முன்னதாக அமெரிக்கா ஆதரவுடன் உக்ரைன் தனது நாட்டில் உயிரியல் ஆயுத தயாரிப்பு ஆய்வகத்தை நடத்தி வருவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியிருந்தது. ஆனால் இதை அமெரிக்காவும் உக்ரைனும் மறுத்திருந்தன

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com