”18 வயது இளைஞர் போல தோற்றமளிக்க வேண்டும்” : 16 கோடி செலவழித்த 45 வயதான நபர் - எங்கே?

45 வயதாகும் பிரையன் ஜான்சன் தான் 18 வயது இளைஞனாக தோற்றமளிக்க வேண்டும் என்று ஆண்டுக்கு ரூ.16 கோடி வரை செலவிடுகிறார்.
Bryan Johnson
Bryan JohnsonTwitter
Published on

அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் பிரையன் ஜான்சன், 18 வயது இளைஞனாக தோற்றமளிக்க ஆண்டுக்கு 16 கோடி ரூபாயை செலவு செய்து வருகிறார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கும் ஒரு பயோடெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிரையன் ஜான்சன் பணிபுரிந்து வருகிறார்

தற்போது 45 வயதாகும் பிரையன் ஜான்சன் தான் 18 வயது இளைஞனாக தோற்றமளிக்க வேண்டும் என்று எண்ணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்.

இதற்காக, தான் வசிக்கும் இடத்தின் ஒரு பகுதியை மினி மருத்துவ ஆய்வகமாக மாற்றியுள்ளார்.

30 மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து தன் உடலை பராமரித்து வருகிறார் ஜான்சன்.

அந்த மருத்துவ நிபுணர்கள் ஜான்சனின் உடலை தினமும் பரிசோதித்து, அவரின் உடல் உறுப்புகளை இளைஞரின் உடல் உறுப்புகளை போல் மாற்றும் வழிமுறைகளை செய்து வருகின்றனர்.

Bryan Johnson
பூனை கடித்ததால் 15 அறுவை சிகிச்சைகள்; விரலை வெட்டி எடுத்தும் உரிமையாளர் உயிரிழப்பு- எங்கே?

அதன்படி, 18 வயதுடைய இளைஞனின் நுரையீரல், 28 வயது இளைஞனுக்கான தோல் தோற்றம், 37 வயது இளைஞனின் இதய செயல்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளதாக ஜான்சன் கூறியுள்ளார்.

இதேபோல், தனது பல், கல்லீரல், சிறுநீரகங்கள், தசைநாண் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் 18 வயது இளைஞனின் உடல் உறுப்புகளை போல் மாற்றும் முயற்சியில் பிரையன் ஜான்சன் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்காக ஆண்டுக்கு ரூ.16 கோடி வரை செலவிடுகிறார் பிரையன் ஜான்சன்.

Bryan Johnson
அழகாய் இருக்க அலுப்பா இருக்கு; ‘அசிங்கமாக’ மாற டாட்டூ போட்டுகொள்ளும் இளம் பெண்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com