Blackout challenge : TikTok அறிமுகப்படுத்திய புதிய விளையாட்டால் 2 சிறுமிகள் உயிரிழப்பு

இந்த விளையாட்டால் இறந்த சிறுமிகள் இருவரும் எட்டு மற்றும் ஒன்பது வயதே நிரம்பியவர்கள் ஆவர். நாய் கட்டும் கயிற்றை இந்த மூச்சுத் திணற வைக்கும் விளையாட்டிற்காகப் பயன்படுத்திய போது இறந்திருக்கிறார்கள்.
TikTok
TikTokTwitter
Published on

டிக் டாக் சமூக வலைதள நிறுவனம், "பிளாக் அவுட் சேலஞ்ச்" என்ற புதிய விளையாட்டை உருவாக்கியுள்ளது. அந்த விளையாட்டின் விதியின்படி, பங்கேற்பவர்கள் வெளியேறும் வரை மூச்சு விடாமல் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

இந்த ஆபத்தான விளையாட்டில் பங்கேற்றபோது அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் இறந்து போயிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இதனையடுத்து அந்த சிறுமிகளின் பெற்றோர்கள் டிக் டாக் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள்.

டிக் டாக் நிறுவனம், வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் ’பிளாக்அவுட்’ சவாலை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டி, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மாநில நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை, சமூக ஊடக பாதிக்கப்பட்டோர் சட்ட மையத்தின் வழக்கறிஞர் மேத்யூ பெர்க்மேன் என்பவர் தாக்கல் செய்திருக்கிறார்.

TikTok
TikTokTwitter

"இந்த இரண்டு இளம் பெண்களுக்கு கொடியதொரு விளையாட்டை வழங்கியதற்கு TikTok பொறுப்பேற்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

"TikTok ஆபத்தான உள்ளடக்கத்தைக் கொண்ட தயாரிப்புகளை வடிவமைக்க பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. ஆனால் அவை யாவும் பயனர்களின் மரணத்திற்கு வழிவகுக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விளையாட்டால் இறந்த சிறுமிகள் இருவரும் எட்டு மற்றும் ஒன்பது வயதே நிரம்பியவர்கள் ஆவர். நாய் கட்டும் கயிற்றை இந்த மூச்சுத் திணற வைக்கும் விளையாட்டிற்காகப் பயன்படுத்திய போது இறந்திருக்கிறார்கள்.

TikTok
டிக்டாக் : கோடியில் பணம், சிறை - Tiktok ஆல் திணறும் அரபு உலகம் - என்ன நடக்கிறது அங்கே?
mobile APP
mobile APPTwitter

பிளாக்அவுட் சவாலை ஊக்குவிப்பதற்காக TikTok பல வழிமுறையைப் பயன்படுத்துவதாக சிறுமிகளின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இத்தாலி மற்றும் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த இதேபோன்ற மரணங்களை எடுத்துக்காட்டுகளாகப் பட்டியலிட்டுள்ளனர்.

TikTok அதன் விளம்பரங்களின் மூலம் குழந்தைகளைக் கவர்ந்து செல்வதையும், ஆபத்தான சவால்களை ஊக்குவிப்பதையும் நிறுத்த உத்தரவிடுமாறு நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். "Skull Breaker Challenge", "Coronavirus Challenge" மற்றும் "Fire Challenge" போன்ற தீங்கு விளைவிக்கும் சவால்களின் உதாரணங்களையும் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

இதனையடுத்து டிக் டாக்கின் பல பயனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், டிக் டாக் சில நேரங்களில் ஆபத்தான கருப்பொருள் கொண்ட சவால்களின் வரிசையைக் குறிப்பிட்டு விளம்பரப்படுத்துவதாகக் கவலைகளை எழுப்பியுள்ளனர்.

TikTok
காஷ்மீரில் தீவிரவாதிகளால் டிக்டாக் மாடல் சுட்டுக்கொலை - திட்டமிட்ட தாக்குதலா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com