வாட்ஸ் அப்பில் ஊழியர் "Hey" சொன்னதால் கடுப்பான பாஸ் - நெட்டிசன்கள் கருத்து என்ன?

தனக்கு வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிய மேலதிகாரிக்கு "Hey" என்று தன் பதிலை ஆரம்பித்த ஊழியரிடம், தன்னிடம் ஹே என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம், அது முறையாக இல்லை எனக் கூறிய boss- தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி வருகிறார்.
Whatsapp
WhatsappCanva
Published on

பொதுவாகவே நாம் வேலை செய்யும் இடத்தில் நமக்கும், நமது மேலதிகாரிக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கும் என்பது பரவலாக இருக்கும் ஒரு கருத்து. இப்படி ஏதோ ஒரு வகையில் மேலதிகாரியுடன் தனக்கு மனக்கசப்பு ஏற்பட்டது என்று பெற்றோர், நண்பர்கள் சொல்லிக் கேட்டிருப்போம்.

ஆனால் காலப்போக்கில் அது மாறியது. அலுவலகங்களில் மேலதிகாரிகளும், ஊழியர்களும் நண்பர்கள் போல பேசி பழகி, ஒருவருக்கு ஒருவர் இருந்த Hierarchy ஐ மெல்ல உடைத்தனர்.

இதனால் நமது வேலை மீது அதிக கவனமும், ஈடுபாடும் இருக்கும், வெறுப்பு தோன்றாது. இப்போது பல விஷயங்கள் ஃப்ரெண்ட்லியாக மாறிவிட்ட சூழலில், அங்கும் இங்கும் ஒன்றிரண்டு பேர் இன்னும் கொஞ்சம் பழைய சிந்தனைகளோடு இருக்கிறார்கள் என்பது தவிர்க்கப்படமுடியாத ஒன்று. அப்படி தான் இந்த பாஸ் தன் ஊழியரிடம் நடந்துகொண்டுள்ளார்.

ஒரு மேலதிகாரி தன் சக ஊழியரிடம் டெஸ்ட் ஸ்ப்மிட் செய்தாகிவிட்டதா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர் ரிப்ளை செய்கையில், "ஹே" என்ற வார்த்தையுடன் துவங்கியுள்ளார். அதற்கு பதிலளித்த அவரது பாஸ், தனது பெயர் சந்தீப் என்றும், ஒருவேளை அவரது பெயர் ஞாபகத்திற்கு வராவிட்டால், ஹாய் என்று சொல்லலாம்.

ஆனால் ஹே என்ற வார்த்தை சற்று முறைசாரா வார்த்தையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

"ஹே" என்ற வார்த்தை, வணக்கம் போன்று பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தையாகும். இது ஹாய் என்ற வார்த்தையின் மற்றொரு வடிவம். ஹலோ என்பது சற்று ப்ரொஃபெஷனலாக இருக்கும். அது சிறிது மறுவி ஹே, ஹாய் என்ற வார்த்தைகள் அதிக பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

தற்போது அது சகஜமாகவும் மாறிவிட்ட நிலையில், அது மரியாதை குறைவாகவோ, அல்லது முறையற்ற தன்மையோ எதுவும் இல்லை. அதனால், அந்த மேலதிகாரியின் இந்த பதில் இணையவாசிகள் பலரது கருத்துகளை கிளறவிட்டுள்ளது.

இவர் இத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. டூட், மேன் என்று குறிப்பிடும் வார்த்தைகளையும் முறையற்ற வார்த்தைகள் தான் என்று அவர் கூறியுள்ளார். ஒன்று தன்னிடம் பேசுகையில் ஹலோ என்றோ, ஹாய் என்றோ குறிப்பிடலாம், ஆனால் ஹே என்று பயன்படுத்தவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த அந்த ஊழியர், "நீங்களே என்னிடம் வாட்ஸ் அப்பில் பேசுகையில், நான் ஹே என்று பயன்படுத்தியதில் முறையற்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என்றும், மேலும், professional ஆக இருப்பதை பற்றி பேசவேண்டும் என்றால், இந்த சின்ன விஷயத்திற்கு offend ஆவது நானல்ல என்பதையும் குறிப்பிட்டார்.

அதையும் ஏற்றுக்கொள்ள முடியாத அந்த கரார் பாஸ், வாட்ஸ் அப் தற்போது வேலை நிமித்தமாக தான் பலரும் பயன்படுத்துகிறார்கள் என்றும், தனது ஐடியாலஜியை அவர் யார் மீதும் புகுத்தவில்லை, உங்களுக்குப் புரிந்தால் சரி. இல்லையென்றால் விரைவில் தான் சொல்வது புரியும் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் தன்னிடம் எப்படி பேசவேண்டும் என்று அறிவுறுத்தும் அவரது போக்கை என்னவென்று சொல்வது? இந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட்டை அந்த ஊழியர் பகிர, நெட்டிசன்கள் பலரும் அந்த மேலதிகாரியை கடிந்து வருகின்றனர். மேலும் தங்களுக்கு அவர்களது மேலதிகாரியிடம் இப்படி ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் பலர் பகிர்ந்து வந்தனர்.

Whatsapp
இனி டெலிட் செய்ய வேண்டாம்; மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துகிறது Whatsapp

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com