தன்னுடைய உதட்டை கடித்த பாம்பை வாயில் வைத்துக் கடித்தே கொன்ற 2 வயது சிறுமியின் செயல் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
2 வயதான சிறுமி துணிச்சலாக உதட்டைக் கடித்த பாம்பை வாயில் வைத்துக் கடித்தே கொன்ற சம்பவம் துருக்கியில் அரங்கேறியுள்ளது.
துருக்கியின் காந்தார் கிராமத்தில் உள்ள தனது வீட்டின் பின்புற தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது 2 வயது சிறுமியின் வாயில் பாம்பு இருந்துள்ளது.
இதனைக் கண்ட பக்கத்து வீட்டார்கள், அலறல் சத்தம் போட்டனர். சிறுமியின் வாயில் பாம்பு இருப்பதையும், கீழ் உதட்டில் கடித்த அடையாளத்தையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தவழும் குழந்தைகள் கீழே இருப்பதை எடுத்து வாயில் வைப்பார்கள். அப்படி தான் அந்த சிறுமியும் பாம்புடன் விளையாடியுள்ளார். அப்போது அந்த பாம்பு சிறுமியின் கீழ் உதட்டில் கடித்துள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி பற்களால் பாம்பைக் கடித்தே கொன்றுள்ளார்.
உடனடியாக அச்சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு 24 மணிநேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, குழந்தைக்கு ஆபத்து ஏற்படவில்லை என்றும் பாம்புடன் விளையாடிக் கொண்டிருந்த போது, பாம்பு அவளை கடித்ததால், மீண்டும் பாம்பைக் கடித்திருக்கிறார் என்று அவரது தந்தை மெஹ்மத் எர்கான் கூறியிருக்கிறார்.
இதேபோன்ற 8 வயது சிறுவன் ஒரு விஷப் பாம்பு கடித்ததால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவருக்கு கை 'சாதாரண அளவை விட ஐந்து மடங்கு' வீங்கியது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust